மறைந்த ஜஸ்வந்த் சிங்கிற்கு இரங்கல்

இந்தியாவின் முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உடல்நலக் குறைவால் தமது 82-வது வயதில் இன்று காலமானார். மருத்துவமனையில் அவர் மாரடைப்பால் உயிர் இழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் தற்போதைய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியை நிறுவிய முக்கிய தலைவர்களில் ஒருவரான திரு சிங் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதியமைச்சர், வெளியுறவு, பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

1938 ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜசோல் என்ற கிராமத்தில் பிறந்த திரு சிங், ராணுவத்தில் பணியாற்றிய பின்னர் 1980களில் இந்திய அரசியலில் இடம்பெறத் தொடங்கினார். T

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தற்போது அவருக்கு இரங்கல் செலுத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!