சுடச் சுடச் செய்திகள்

சிபிஐ: சுஷாந்த் மரண வழக்கின் விசாரணை இன்னும் முடியவில்லை

மும்பை: இந்தி நடி­கர் சுஷாந்த் சிங்­கின் மர­ணம் தொடர்­பான விசா­ரணை இன்­னும் முடி­வ­டை­ய­வில்லை என சிபிஐ தெரி­வித்­துள்­ளது.

சுஷாந்த் தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக முத­லில் கூறப்­பட்­டது. எனி­னும் பின்­னர் அவர் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம் எனும் சந்­தே­கம் எழுந்­ததை அடுத்து இந்த வழக்கு சிபி­ஐக்கு மாற்­றப்­பட்­டது.

சிபிஐ மேற்­கொண்ட விசா­ர­ணை­யின்­போது சுஷாந்த் சிங் போதைப் பொருட்­கள் பயன்­ப­டுத்­தி­ய­தும் அவ­ரது காதலி ரியா சக்­க­ர­போர்த்தி அவ­ருக்­குப் போதைப் பொருளை வாங்­கித் தந்­த­தும் அம்­ப­ல­மா­னது.

மேலும் இந்­தித் திரை­யு­ல­கைச் சேர்ந்த பல பிர­ப­லங்­க­ளுக்கு போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தும் பழக்­கம் இருப்­ப­தாக தக­வல் வெளி­யா­னது.

இதை­ய­டுத்து சிபிஐ அதி­கா­ரி­களும் போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­களும் தீவிர விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

நடி­கை­கள் தீபிகா படு­கோன், ரகுல் பிரீத்­சிங் உள்­ளிட்ட நடி­கை­க­ளி­டம் விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

ரியா சக்­க­ர­போர்த்தி போதைப்­பொ­ருள் கும்­ப­லின் தீவிர உறுப்­பி­னர் என்று போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு, நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தது.

தமக்­குப் பிணை வழங்­கக் கோரி ரியா நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார். அந்த மனு மீதான விசா­ர­ணை­யின்­போதே சிபிஐ தரப்­பில் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே கன்­ன­டத் திரை உல­கி­லும் பல­ருக்­குப் போதைப் பொருள் பயன்­ப­டுத்­தும் பழக்­கம் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இது தொடர்­பாக நடி­கை­கள் ராகினி, சஞ்­சனா ஆகி­யோ­ரும் கைதா­கி­யுள்­ள­னர்.

அவர்­கள் இரு­வ­ரும் தாக்­கல் செய்த பிணை மனுக்­களை பெங்­க­ளூரு சிறப்பு நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­துள்­ளது.

போதைப்­பொ­ருள் விவ­கா­ரம் தொடர்­பாக பெங்­க­ளூரு போலி­சார் இது­வரை 14 பேர் மீது வழக்கு பதிவு செய்­துள்­ள­னர்.

மேலும் தலை­ம­றை­வாக உள்ள சில­ரைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளை­யும் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon