மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளில் மலரஞ்சலி

மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளில் மலரஞ்சலி

1 mins read
dd103df9-f4f3-46f0-ad19-646c6d5463ba
சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து காந்தியின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். படம்: ஏஎஃப்பி -

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தியின் சிலைக்கு அவரது 151வது பிறந்தநாளை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட இரு பெண் ஆய்வாளர்கள் உள்பட ஐந்து போலிசாருக்கு காந்தி யடிகள் காவல் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும் எனவும் பரிசுத்தொகையாக தலா ரூ.40,000 வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்