எடியூரப்பா: 34 மாணவர்களுக்குப் பாதிப்பு; பள்ளிகளுக்கு மூன்று வாரம் விடுமுறை

கர்­நா­ட­கா­வில் உள்ள பள்­ளி­க­ளுக்கு மூன்று வார காலம் விடு­முறை அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா பாதிப்பு அதி­கம் இருப்­ப­தால் ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­க­ளின் நலன் கருதி நேற்­று­முதல் வரும் 30ஆம் தேதி வரை மூன்று வாரங்­க­ளுக்கு விடு­முறை அறி­வித்­துள்­ள­தாக முதல்­வர் எடி­யூ­ரப்பா தெரி­வித்­துள்­ளார்.

கர்­நா­டக மாநி­லத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 700,786 ஆக உயர்ந்­துள்­ளது. இத்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கையும் 9,966ஆக அதி­க­ரித்­துள்­ள­தால் மக்­கள் அச்­ச­ம­டைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், இத்­தொற்று பர­வும் வேகம் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால், பள்­ளி­கள் திறக்­கப்­பட்­டால் மாண­வர்­க­ள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்­புள்­ள­தாக சமூக ஆர்­வ­லர்­கள் எச்­ச­ரித்­துள்ளனர்.

கர்­நா­ட­கா­வில் ‘வித்­ய­கமா’ என்ற திட்­டத்­தின்­கீழ் கிரா­மப்­பு­றங்­க­ளில் கல்வி கற்­றுத் தரப்­ப­டு­கிறது. இது­போல் அங்கு கல்வி பயின்ற 34 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப் பது உறு­தி­யாகி உள்­ளது.

“மாநி­லத்­தில் பரவும் கிருமித் தொற்­றால் மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இவர்களது நல­னைக்­கருத்­தில் கொண்டு இப்­போது முதல் வரும் 30ஆம் தேதி வரை­யில் மூன்று வார காலத்­திற்கு பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அளிக்­கும்­படி அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளேன்,” என்று முதல்­வர் எடி­யூ­ரப்பா கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 71 லட்­சத்தைக் கடந்­துள்ள நிலை­யில், 61.49 லட்­சம் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். இந்­தியாவில் கடந்த 24 மணி நேரத்­தில் 66,732 பேருக்கு கிருமி பரவியுள்­ளது. ஆனா­லும் இந்த புதிய பாதிப்பு குறைந்­துள்­ள­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!