கேரள தங்கக் கடத்தலில் தாவூத்துக்கு தொடர்பு என சந்தேகம்

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் தாவூத் இப்ராகிம் (படம்) தரப்புக்கும் தொடர்புகள் இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை சந்தேகிக்கிறது.

கடத்தல் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த சந்தேகத்தைப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தித் தங்கக் கடத்தல் நடந்துள்ளது. கிலோ கணக்கிலான தங்கம் கடத்தி வரப்பட்டது தொடர்பாக கேரள அரசு ஊழியர் ஸ்வப்னா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் ஐக்கிய அரபு சிற்றரசின் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இக்கடத்தலில் தொடர்பிருக்கக்கூடும் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்த இருந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தூதரகம் திடீரென மூடப்பட்டுள்ளது.

தூதரக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இருப்பதால் எதிர்வரும் 20ஆம் தேதி வரை தூதரகப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது தங்கக் கடத்தலில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை குறிப்பிட்டது.

தங்­கக் கடத்­தல் மூலம் கிடைத்த பணம் தேச எதிர்ப்பு நடவடிக்­கை­களுக்­கும் பயங்­க­ர­வாத ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கைக்­கும் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள புல­னாய்வு முகமை, அதற்­கு­ரிய ஆதா­ரங்­கள் இருப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

இந்த வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள ரமீஸ் என்­ப­வர் தான்­சா­னியா நாட்­டில் வைர வியா­பா­ரத்­தில் ஈடு­பட முயன்­ற­தா­க­வும் தங்­கச் சுரங்­கத்­துக்­கான உரி­மம் பெற்­றி­ருப்­ப­தா­க­வும் தனது வாக்கு­மூ­லத்­தில் தெரி­வித்­துள்­ளார். தான்­சா­னி­யா­வில் கிடைத்த தங்­கத்தை அவர் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சில் விற்­பனை செய்­துள்­ளார்.

“இந்­நி­லை­யில் தான்­சா­னியா வைர வியா­பா­ரத்­தில் தாவூத் இப்­ரா­கி­முக்­கும் தொடர்பு இருப்­ப­தாக அண்­மைய தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. தாவூத் சம்­பந்­தப்­பட்ட வைர வியா­பார நட­வ­டிக்­கை­க­ளைத் தென்­இந்­தி­யா­வைச் சேர்ந்த பெரோஸ் என்­ப­வர் கவ­னிப்­ப­தா­கத் தெரி­கிறது.

“இது தொடர்­பான தக­வல்­க­ளைப் புல­னாய்வு அமைப்­பு­கள் சேக­ரித்­துள்­ளன,” என்று தேசி­யப் புல­னாய்வு முகமை சிறப்பு நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது.

எனவே, தங்­கக் கடத்­த­லில் தாவூத் இப்­ரா­கிம் தரப்­புக்­குத் தொடர்­பு­கள் இருப்­பது குறித்து தீவி­ர­மாக விசா­ரிக்க வேண்டி உள்­ளது என­வும் புல­னாய்வு முகமை மேலும் தெரி­வித்­துள்­ளது.

குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்­குப் பிணை வழங்­கக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­திய அம்­மு­கமை குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு கைதான 180 நாட்­க­ளுக்­குள் பிணை வழங்­கு­வதை நீதி­மன்­றம் பரி­சீ­லிக்­கக்­கூ­டாது என்­றும் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!