சீனா, இந்தியா இடையே எட்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: எல்­லை­யில் படை­க­ளைக் குவிக்­கும் நட­வ­டிக்­கைக்கு மத்­தி­யில் இந்­தியா, சீனா இடையே எட்­டா­வது சுற்­றுப் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட உள்­ளது.

ராணுவ உயர் அதி­கா­ரி­கள் இந்­தப் பேச்­சு­வார்த்­தை­யில் பங்­கேற்க உள்­ள­னர்.

இந்­திய சீன எல்­லைப் பகு­தி­யில் கடந்த ஐந்து மாதங்­க­ளாக தொடர்ந்து பதற்­றம் நிலவி வரு­கிறது. இரு­த­ரப்பு வீரர்­களும் மோதிக்­கொண்­ட­தில் உயி­ரி­ழப்­பு­களும் ஏற்­பட்­டன.

லடாக் யூனி­யன் பிர­தே­சம், அரு­ணாச்­ச­லப் பிர­தே­சம் ஆகிய இரண்­டை­யும் இந்­தி­யா­வுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளாக ஏற்க இய­லாது என சீனா தெரி­வித்­துள்­ளது. அதற்கு இந்­தி­யா­வின் உள் விவ­கா­ரங்­களில் தலை­யிட உரிமை இல்லை என மத்­திய அரசு பதி­லடி கொடுத்­தது.

சீனா போருக்­குத் தயார் என்­றால் 130 கோடி மக்­கள் தொகை­யைக் கொண்ட இந்­தி­யா­வும் போருக்­குத் தயார் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா சீனா­வுக்­குப் பதி­லடி கொடுத்­துள்­ளார்.

இரு நாடு­க­ளுமே எல்­லை­யில் ஆயி­ரக்­க­ணக்­கான வீரர்­க­ளை­யும் நவீன ஆயு­தங்­க­ளை­யும் குவித்­துள்­ளன.

மோதலை அடுத்து பதற்­றத்­தைக் குறைக்­கும் வகை­யில் இரு நாடு­க­ளை­யும் சேர்ந்த ராணுவ அதி­கா­ரி­கள் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­ற­னர். பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண இது­வரை ஏழு சுற்­றுப் பேச்­சு­வார்த்­தை­கள் நடந்து முடிந்­துள்ள நிலை­யில் எட்­டா­வது சுற்­றுப் பேச்­சு­வார்த்தை நடை­பெற உள்­ளது.

இதில் இந்­திய ராணு­வத்­தின் 14வது படைப்­பி­ரிவு கமாண்­டர் லெப்­டி­னென்ட் ஜென­ரல் பி.ஜி.கே. மேனன் பங்­கேற்­கி­றார். மத்­திய வெளி­யு­றவு இணைச் செய­லா­ளர் நவீன் ஸ்ரீவஸ்­த­வா­வும் பங்­கேற்­பார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எல்­லை­யில் வீரர்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைக்­க­வேண்­டும், ஆயு­தங்­களை அகற்ற வேண்­டும் என இந்­தி­யத் தரப்பு வலி­யு­றுத்­தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!