சுடச் சுடச் செய்திகள்

பீகாரில் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட வேட்பாளர்

தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பீகாரில் பதற்றம் நிலவுகிறது.

வரும் 28ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது.

இந்நிலையில், ஷியோகர் மாவட்டத்தில் ஜனதா தள ராஷ்டிரவாடி கட்சி சார்பில் ஸ்ரீ நாராயண் சிங் என்ற வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இன்று ஹத்சார் கிராமத்தில்  பிரசாரம் மேற்கொண்டபோது திடீரென இரு சக்கர வாகனங்களில் அங்கு வந்தவர்களில் நால்வர் சுயேச்சை வேட்பாளரான ஸ்ரீ நாராயண் சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.

அவருடைய ஆதரவாளர்கள் மூவருக்கும் காயம் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 15 பேர் நாராயண் சிங் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon