சீனாவுடன் போர்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

சீனாவுடன் போர்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

1 mins read
7ad9263e-6884-468b-8510-7bbf50132903
உத்­த­ரப் பிர­தேச மாநில பாஜக தலை­வர் ஸ்வ­தேந்­திர தேவ் சிங். படம்: ஊடகம் -

சீனா­வை­யும் பாகிஸ்­தா­னை­யும் இந்­தியா தைரி­ய­மாக எதிர்­கொள்­ளும் என உத்­த­ரப் பிர­தேச மாநில பாஜக தலை­வர் ஸ்வ­தேந்­திர தேவ் சிங் தெரி­வித்­துள்­ளார்.

மேலும் அவ்­விரு நாடு­க­ளு­டன் போர் தொடுப்­பது குறித்து பிர­த­மர் நரேந்­திர மோடி முடிவு செய்துவிட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டி­ருப்­பது சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் பாஜக எம்­எல்ஏ வீட்­டில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்டு பேசிய அவர், ராமர் கோவில் மற்­றும் காஷ்­மீ­ருக்கு வழங்­கப்­பட்டு வந்த சிறப்பு அங்­கீ­கா­ரம் தொடர்­பாக முடிவு எடுத்­தது போல், போர் தொடுக்­கும் விஷ­யத்­தி­லும் பிர­த­மர் மோடி முன்பே முடி­வெ­டுத்­து­விட்­ட­தாக கூறி­னார்.

மேலும், சமாஜ்­வாதி கட்சி மற்­றும் மாயா­வதி தலை­மை­யி­லான பகு­ஜன் சமாஜ் ஆகிய கட்­சி­க­ளின் தொண்­டர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளு­டன் ஒப்­பிட்டும் அவர் பேசி­னார்.

ஸ்வ­தேந்­திர தேவ் சிங்­கின் பேச்­சுக்கு எதிர்க்­கட்­சி­யி­னர் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

சீனா­வு­டன் அமை­தி­யான உற­வையே இந்­தியா விரும்­பு­கிறது என்­றும் இரு­த­ரப்­புக்­கும் இடை­யே­யான பதற்­றத்தைக் குறைப்­ப­தற்­கான முயற்­சி­கள் நீடிப்­ப­தா­க­வும் மத்­திய தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்நிலையில் சீனாவுடன் போர் தொடுப்பது குறித்து பாஜக மாநிலத் தலைவர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜக தலைமை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.