இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: சீனா எச்சரிக்கை

இந்­தி­யா­வு­ட­னான எல்­லைப் பிரச்­சி­னை­யில் மூன்­றாம் தரப்­புக்கு அறவே இட­மில்லை என சீனா தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக டெல்­லி­யில் உள்ள சீனத் தூத­ர­கம் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், எல்­லைப் பிரச்­சினை என்­பது இரு­த­ரப்­புக்கு மட்­டுமே உரிய விவ­கா­ரம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­திய மக்­கள் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்­வ­தா­க­வும் அமெ­ரிக்கா இந்­திய மக்­க­ளு­டன் நிற்­கும் என்­றும் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சு அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தது.

இது சீனத் தரப்­புக்­குக் கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதை­ய­டுத்தே சீனத் தூத­ர­கத்­தின் அறிக்கை வெளி­யா­னது.

“இந்­தியா, சீனா இடை­யே­யான எல்­லைப் பிரச்­சி­னை­யில் மூன்­றாம் தரப்பு தலை­யி­டும் பேச்­சுக்கே இட­மில்லை. இந்­தி­யா­வும் சீனா­வும் தங்­க­ளுக்கு இடையே உள்ள வேறு­பா­டு­க­ளைத் தீர்த்­துக்கொள்­ளும். எனவே, சீனா குறித்து தவ­றான தக­வல்­க­ளைப் பரப்­பும் வேலையை அமெ­ரிக்கா நிறுத்­திக்­கொள்ள வேண்­டும்,” என சீனா வலி­யு­றுத்தி உள்­ளது.

இதற்­கி­டையே பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பாகிஸ்­தா­னுக்கு இந்­தியா, அமெ­ரிக்கா அழைப்பு விடுத்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon