அமெரிக்கா: கல்வான் மோதல் சீனாவின் திட்டமிட்ட செயல்

இந்­தியா- சீனா எல்லை­யில் லடாக் பகுதியை ஒட்டிய கல்­வான் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­யில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இரு நாட்டு வீரர்­க­ளுக்­கும் இடை­யில் மோதல் நடந்­தது. அதில் இந்­திய வீரர்­கள் 20 பேர் மாண்­ட­னர்.

சீனா தரப்­பில் எவ்­வ­ளவு பேர் பலி­யா­யி­னர் என்­பது அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தெரி­ய­வில்லை. இந்­தச் சம்­ப­வத்தை அடுத்து எல்­லை­யில் அமை­தியை ஏற்­ப­டுத்த இரு தரப்­பு­களும் முயன்று வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இரு­த­ரப்­பி­லும் எல்­லை­யில் படை­க­ளைக் குறைப்­ப­தற்­காக உயர்­ அதி­கா­ரி­கள் மட்­டத்­தி­லான பல­கட்ட பேச்­சு­வார்த்­தை­கள் நடந்து­ வ­ரு­கின்­றன.

இந்­நி­லை­யில், ‘கல்­வான் பள்­ளத்­தாக்கு மோதல் சீனா­வின் திட்­ட­மிட்ட செயல்’ என அமெரிக்க உயர்நிலைக் குழு ஒன்று தெரி­வித்­தி­ருக்­கிறது.

கிட்­டத்­தட்ட 50 ஆண்­டு­களில் முதன் முத­லாக சீன - இந்­திய எல்­லை­யில் உயிர்­ப்பலி சம்­ப­வத்தை சீனா நடத்தி இருக்­கிறது என்று அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றக் குழு ஆணை­யம் அறிக்கையில் தெரி­விக்­கிறது.

“சீனா தன்­னு­டைய ராணுவ படை­ப­லத்தை அமைதிக் காலத்­தில் பயன்­ப­டுத்­து­கிறது. தைவான், தென்­சீ­னக் கடல் பகு­தி­யில் மிரட்­டல் விடுக்­கும் அள­வில் பெரிய பயிற்­சி­களை நடத்­து­கிறது,” என்று அமெ­ரிக்க - சீன பொரு­ளி­யல் பாது­காப்பு மறு­ப­ரி­சீ­லனை ஆணை­யம் என்ற அந்த அமைப்பு நாடாளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்த அறிக்கை­யில் தெரி­வித்­துள்­ளது.

“இந்த ஆண்­டில் இந்தியாவு­ட­னான தனது எல்­லை­யில் முதல் உயிர்ப்பலி தாக்­கு­தலை அரங்­கேற்றி அதன் மூலம் கோப மூட்டும் செயலை சீனா செய்­துள்­ளது. சீனா­வின் ஆக்­கி­ர­மிப்பு காரி­யங்­கள் எல்­லாம் கண்­கா­ணிக்­கப்­பட்டு­ வ­ரு­கின்­றன என்று அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

“தனது பக்கத்து நாடு­களுடன் எல்­லை­யில் ராணுவப் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தன் மூலம் தனக்குத் தேவை­யா­ன­வற்றைச் சாதித்­துக்­கொள்ள சீனா முயற்­சிக்­கிறது,” என்று கூறப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்திலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இடையில் நிலவும் பதற்றம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!