'தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ரூ.250 கட்டணம்'

இந்தியாவில் நாளை தொடங்கவிருக்கும் இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் பணியில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் செலுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற்று அவற்றை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசுகள் விநியோகிக்கும்.

தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொரு டோஸ் தடுப்பூசி மருந்துக்கும் 150 ரூபாயை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு டோஸ் தடுப்பூசிக்கும் மருத்துவமனைகள் அதிகபட்சமாக 250 ரூபாய் வசூலிக்கலாம்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செல்வோர் அடையாள அட்டை, இணை நோய்கள் குறித்து மருத்துவர்கள் அளித்த சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கிய சேது, கோ-வின் ஆகிய செயலிகளில் முன்பதிவு செய்துகொண்டும் மக்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!