கிருமித்தொற்றுப் பாதிப்பு ஆறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவின் ஆறு மாநி­லங்­களில் கொரோனா கிரு­மித்­தொற்று மீண்­டும் அதி­க­ரித்து வரு­வ­தாக இந்திய சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் இந்தியா முழு­வ­தும் மேலும் 15,510 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இவர்­களில் சுமார் 87.25 விழுக்­காட்­டி­னர் தமி­ழ­கம், மகா­ராஷ்­டிரா, கேரளா, கர்­நா­டகா, குஜ­ராத், பஞ்­சாப் ஆகிய ஆறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

இதை­ய­டுத்து, கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைத் தடுப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆறு மாநி­லங்­க­ளு­டன் மத்­திய அர­சின் சுகா­தார அமைச்சு ஆலோ­சனை நடத்தி வரு­கிறது.

இதற்­கி­டையே தடுப்­பூசி போடும் திட்­டத்­தின் இரண்­டா­வது கட்­ட­மாக 60 வயதை கடந்­தோ­ருக்­கும் இதர உடல் உபா­தை­கள் உள்ள 45 வய­திற்கு மேற்­பட்­டோ­ருக்­கும் தடுப்­பூசி போடும் பணி தொடங்­கி­யுள்­ளது. இம்­முறை 30 மில்­லி­யன் பேர் இதற்­காக தங்­கள் பெயரைப் பதிவு செய்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், டெல்­லி­யி­லும் அதன் புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் முகா­மிட்டு போராட்­டங்­களை நடத்தி வரும் விவ­சா­யி­கள், தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இய­லாது எனத் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

வேளாண் சட்­டங்­களை எதிர்த்து நடந்து வரும் இப்­போ­ராட்­டத்­தில் அறு­பது வய­தைக் கடந்த ஏரா­ள­மான விவ­சா­யி­கள் பங்­கேற்­றுள்­ள­னர்.

உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளுக்குத் தடுப்­பூசி போடும் பணி­யும் நேற்று முன்தினம் தொடங்­கி­யது. இதற்­கான தடுப்­பூசி மையம், உச்ச நீதி­மன்ற வளா­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள், முன்­னாள் நீதி­ப­தி­கள், அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரில் தகுதி உள்­ளோர் தங்­கள் விருப்­பத்­தின் அடிப்­ப­டை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, கொரோனா தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்பி நந்தகு­மார் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­தார். அவரது மறை­வுக்­குப் பிர­த­மர் மோடி இரங்கல் தெரி­வித்­துள்­ளார்.

நாடு முழு­வ­தும் இரண்­டாம் கட்­ட­மாக 300 மில்­லி­யன் பேருக்குத் தடுப்­பூசி போட மத்­திய அரசு முடி­வெ­டுத்­துள்­ளது.

இதற்­காக 10,000 அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

மேலும், முதற்­கட்­ட­மாக 30 மில்­லி­யன் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்குத் தடுப்­பூசி போட அரசு முடிவு செய்­தி­ருந்­தது. ஆனால் இது­வரை 14.30 மில்­லி­யன் பேருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

ஆறு மில்லியன் குடிமக்கள் மீட்பு

‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இதுவரை ஆறு மில்லியன் இந்தியக் குடிமக்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே 6ஆம் தேதி ‘வந்தே பாரத்’ திட்டம் செயல்படத் தொடங்கியதும் 64 விமானங்கள் மூலம், 12,800 பேர் நாடு திரும்பினர் என்றார் அவர்.

உலகில் வேறு எந்த நாடும் தனது குடிமக்களை மீட்பதற்கு இவ்வாறான மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொண்டதில்லை எனக் கூறப்படுகிறது. வந்தே பாரத் திட்டத்தின் எட்டாவது கட்டமாக இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து மாத இறுதிவரை மேலும் பல விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!