வெடிகுண்டு புரளியால் தாஜ்மகால் தற்காலிகமாக மூடல்

தாஜ்மகால், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தற்காலிக மூடப்படுவதாக உத்தரப்பிரதேச மாநில போலிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்ததும், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு இன்று காலை ஏராளமான போலிஸ்காரர்கள், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாஜ்மகாலுக்கு வருகை மேற்கொண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதனையடுத்து தாஜ்மகால் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பல மணி நேரம் சோதனை மேற்கொண்டும் எவ்விதத் தடயமும் சிக்கவில்லை.

இதனை அடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றும் மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் உ.பி. மாநிலத்தின் ஃபிரோசாபாத்தில் இருந்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!