காருக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 43 கிலோ தங்கக்கட்டி பறிமுதல்

காருக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 43 கிலோ தங்கக்கட்டி பறிமுதல்

1 mins read
8f65a605-6217-40bb-8a66-b80200ab8e0e
காரிலிருந்து மீட்கப்பட்ட 43 கிலோ­ கடத்தல் தங்­கக்கட்­டி­கள்.படம்: இந்திய ஊடகம் -

இம்­பால்: மணிப்­பூர் மாநி­லம், இம்­பா­லில் தொடர்ந்து 18 மணி நேர­மாக நடத்­திய சோத­னை­யில், காருக்­குள் மறைத்து வைக்­கப் பட்­டி­ருந்த 43 கிலோ­வுக்­கும் அதி­க­மான தங்­கக் கட்­டி­களை மத்­திய வரு­வாய் புல­னாய்­வுப் பிரிவு அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். இவற்­றின் மதிப்பு ரூ.21 கோடி.

கொரோனா ெதாற்று கார­ண­மாக ஊர­டங்கு உத்­த­ரவு நடப்­பில் இருந்து வரும் நிலை­யி­லும் மியன்மார் எல்­லையை ஒட்டியுள்ள மணிப்­பூ­ர் பகு­தி­களில் தங்­கம் கடத்­துவது தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கடந்த மூன்று மாதத்­தில் மட்­டும் ரூ.33 கோடி மதிப்­புள்ள 67 கிலோ கடத்தல் தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மணிப்­பூர் தலை­ந­கர் இம்­பா­லில், ரக­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் கார் ஒன்றை மறித்து மத்­திய குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு அதிகாரி­கள் சோதனை நடத்­தியபோது, ­ காருக்­குள் இருந்த இரு­வரிடம் விசா­ரணை செய்தனர். தொடர்ந்து, 18 மணி நேரமாக காரில் நடத்­தி­ய சோதனையில் காரின் மூன்று பகு­தி­களில் 43 கிலோ தங்­கம் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. தங்­கத்தை கடத்­து­வ­தற்கு ஏது­வாக அந்த காரில் மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டது அதி­கா­ரி­க­ளின் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.