டெல்லியில் லேசான நிலநடுக்கம்

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

1 mins read
2def46f0-cfa2-4f70-926b-5a91089fa903
-
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று மதிய வேளையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக விவரம் தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக மணிப்பூர், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன. இதனால் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுக் காலையும் மணிப்பூர் மாநிலத்தில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அருணா சல பிரதேசத்தின் பான் கெயின் பகுதியில் நேற்று அதிகாலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரி வித்தது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் வடமாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.