டெங்கி: 11 மாநிலங்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் மிக­வும் ஆபத்­தான புதிய வகை டெங்கிக் காய்ச்­சல் பற்றி 11 மாநி­லங்­கள் தெரி­வித்து இருக்­கின்­றன.

அந்த மாநி­லங்­கள் உட­ன­டி­யாக முன்­ன­தா­கவே நட­வ­டிக்­கை­களை எடுத்து டெங்கிக் காய்ச்­சலை துடைத்­தொ­ழிக்க வேண்­டும் என்று மத்­திய அர­சாங்­கம் வலி­யு­றுத்தி இருக்­கிறது.

அதி­வீ­ரிய டெங்கி கொசு காரணமாக 'செரோ­டைப்-2' என்று குறிப்பிடப்படும் கடு­மை­யான பாதிப்­பு­ள்ள காய்ச்சல் ஏற்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

காய்ச்­சல் ஏற்­பட்­டால் உத­வும் தொலைத்தொடர்பு வழி­களை ஏற்­படுத்­து­மா­றும் போதிய மருத்­துவ சாத­னங்­களை இருப்பு வைக்­கும்­படி­யும் கொசு மருந்­து­களும் சிகிச்சை மருந்­து­களும் போதிய அள­வுக்கு இருப்­பதை உறு­திப்­படுத்­து­மா­றும் மத்­திய அரசு அந்த மாநி­லங்­க­ளைக் கேட்­டுக்­கொண்டது.

கொரோனா தொற்று இன்­ன­மும் பெரும் மிரட்­ட­லாக நீடிக்­கும் நிலையில், அடுத்த மிரட்­ட­லாக டெங்கிக் காய்ச்­சல் உரு­வெ­டுக்­கிறது என்று இந்­திய அரசு எச்­ச­ரித்து இருக்­கிறது.

நாட்­டில் கொவிட்-19 சூழ்­நி­லை­யைப் பரி­சீ­லிப்­ப­தற்­காக உயர்­நிலைக் கூட்­டம் நடந்­தது. அதன் முடி­வில் இந்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

விழா­க்கா­லம் நெருங்­கு­வ­தால் மக்­கள் அதி­க­மாக பல இடங்­க­ளி­லும் கூடு­வ­தற்கு வாய்ப்­பு­கள் இருப்­பதைச் சுட்­டிய மத்­திய அர­சாங்­கம், அத்­த­கைய நிலை­மை­களைத் தவிர்த்­துக்­கொள்­ளும்­படி மாநி­லங்­களுக்கு உத்­த­ர­விட்டு உள்­ளது.

இதற்கு முன்­ன­தாக ஆகஸ்ட் மாதத்­தி­லும் இந்த மாதத்­தி­லும் அந்த மாநி­லங்­க­ளுக்கு சுகா­தார அமைச்சு ஏற்­கெ­னவே ஆலோ­சனை­களைத் தெரி­வித்து இருப்­ப­தாக கூறப்­பட்டு உள்­ளது.

ஆந்­தி­ரப் பிர­தே­சம், குஜ­ராத், கர்­நா­டகா, கேரளா, மத்­தி­யப் பிர­தே­சம், உத்­த­ரப் பிர­தே­சம், மகா­ராஷ்­டிரா, ஒடிசா, ராஜஸ்­தான், தமிழ்­நாடு, தெலுங்­கானா ஆகிய மாநி­லங்­களில் புதிய வகை டெங்கிக் காய்ச்­சல் தலை­யெ­டுப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட்-19ஐ பொறுத்­த­வரை, 15 மாநி­லங்­களில் தொற்று விகி­தா சா­ரம் அதி­க­மாக இருப்­ப­தால் தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மிக­வும் செம்மை­யான முறை­யில் அந்த மாநி­லங்­கள் எடுக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் ராஜேஷ் பூஷண் உத்­த­ர­விட்­டார்.

தலைதூக்கும் அடுத்த மிரட்டலைச் சமாளிக்க ஆயத்தமாகும்படி வலியுறுத்து

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!