‘கிரிமினல்’ வேட்பாளர்களைக் களமிறக்க கட்டுப்பாடுகள்

புதுடெல்லி: ஐந்து மாநி­லத் தேர்­த­லுக்­கான ஆலோ­ச­னைக் கூட்­டம் நேற்று மெய்­நி­கர் ஏற்­பாட்­டின் வழி­யாக நடை­பெற்­றது. இதில் குற்­ற­வி­யல் வழக்­கு­க­ளு­டன் தொடர்­பு­டைய வேட்­பா­ளர்­கள் மீதான விதி­மு­றை­க­ளைக் கடு­மை­யாக்க மத்­திய தேர்­தல் ஆணை­யம் முடிவு செய்­துள்­ளது.

அடுத்த ஆண்­டுத் துவக்­கத்­தில் உத்­த­ரப்­பி­ர­தே­சம், உத்­த­ரகாண்ட், பஞ்­சாப், கோவா மற்­றும் மணிப்­பூர் ஆகிய மாநி­லங்­களில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதுதொடர்பாக மாநி­லத் தேர்­தல் ஆணை­யர்­க­ளு­டன் மத்­திய தேர்­தல் ஆணை­யம் நேற்று ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்­தி­யது.

இதில், குற்­ற­வி­யல் வழக்­கு­ பின்னணியைக் கொண்ட வேட்­பா­ளர்­கள் தேர்தலில் போட்­டி­யிட புதிய விதி­முறை­களை ஆணை­யம் வெளி­யிட்­டுள்­ளது. இத­னால், அவர்­க­ளைப் போட்­டி­யிட வைக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளுக்­குக் கூடு­தல் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

இதன்­படி, அவ்வகையான வேட்­பா­ள­ரின் பெயரை கட்சி அறி­வித்­த­ 48 மணி நேரத்­திற்குள் அவர்­க­ளைப் பற்­றிய முழுமையான விவ­ரத்தை கட்சி வெளி­யி­ட வேண்­டும். இதை நாளி­தழ்­கள் மற்­றும் ஊட­கங்­கள் வாயி­லாக விளம்பரமாக வெளி­யிட வேண்­டும்.

இதில், அந்த வேட்­பா­ளர் மீது உள்ள வழக்­கு­கள் எத்­தனை? அதன் விவ­ரம் என்ன? ஆகி­யவை இடம் பெற வேண்­டும். நீதி­மன்­றங்­களில் இவ்­வ­ழக்­கு­கள் எந்­த­நி­லை­யில் உள்­ளன என்­பது குறித்­தும் தெரி­விக்கவேண்­டும்.

குற்­ற­வி­யல் வழக்­கு­களை எதிர்நோக்குபவரை வேட்­பா­ள­ராக்­கக் கார­ணம் என்ன? என­வும், குற்றப்பின்னணி இல்லாதவரை தேர்தலில் நிறுத்தாது ஏன்? என்­றும் அவ்­வி­ளம்­ப­ரத்­தில் விளக்­கம் அளிக்­க­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த விளம்­ப­ரங்­கள், வேட்­பா­ளர் பெயர் அறி­வித்த நான்கு நாட்­களில் வெளி­யாக வேண்­டும். பிறகு வாக்­குத் தேதிக்கு நான்கு நாட்­க­ளுக்கு முன்னர் மீண்­டும் வெளி­யி­டப்­பட வேண்­டும்.

கடந்த 2018 செப்­டம்­பர் 25இல் உச்ச நீதி­மன்­றம் அளித்த தீர்ப்­பில், குற்­ற­வி­யல் வேட்­பா­ளர்­க­ளுக்­கான இந்த விதி­மு­றை­கள் வெளி­யாகி இருந்­தது. ஐந்து மாநில ஆணை­யர்­க­ளின் ஆலோ­ச­னைக் கூட்­டம், மத்­திய தேர்­தல் ஆணை­ய­ரான அஜய் குமார் சுக்லா தலை­மை­யில் நடை­பெற்­றது. வரும் நவம்­பர் முதல் இந்த ஐந்து மாநி­லங்­க­ளின் வாக்­கா­ளர் பட்­டி­யலில் திருத்­தம் நடை­பெற உள்­ளது. இதில், ஊர் ­மா­றிய மற்­றும் காலஞ்சென்றவர்களின் பெயர்­கள், பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­ப­ட­ உள்­ளது. இத்­து­டன் வரு­ம் 2022ஆம் ஆண்டு ஜன­வரி முதல் 18 வயது நிறை­வ­டை­ப­வர்­க­ளின் பெயர்­கள் புதிய வாக்­கா­ளர்­க­ளா­கப் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­படும். இப்­பட்­டி­யல் தேர்­தல் அறி­விப்­ப­தற்கு முன்­பாக வெளி­யி­டப்­படும் என்றும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!