நடிகர் ஷாருக் கானின் மும்பை வீட்டில் அதிரடி சோதனை

மும்பை: போதைப்­பொ­ருள் வழக்­கில் சிக்­கி­யுள்ள தன் மகன் ஆர்­யன் கானை இந்தி நடி­கர் ஷாருக்­கான் சிறை­யில் சந்­தித்­தார்.

இந்­நி­லை­யில், மும்­பை­யில் உள்ள அவ­ரது வீட்­டில் போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு போலி­சார் நேற்று அதி­ரடி சோதனை மேற்­கொண்­ட­னர். இது இந்தி திரை­யு­ல­கத்­தி­னர் மத்­தி­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

நேற்று காலை மும்பை ஆர்­தர் சாலை­யில் உள்ள சிறை­யில் ஆர்­யன் கானை சந்­தித்­துப் பேசிய ஷாருக், இந்த நெருக்­க­டி­யான வேளை­யில் நம்­பிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும் என மக­னுக்கு அறி­வுரை கூறி­ய­தா­கத் தெரி­கிறது.

இந்­தச் சந்­திப்பு உருக்­க­மா­ன­தாக இருந்­தது என்று சிறைத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இந்­நி­லை­யில், அவ­ச­ர­கால மனு­வா­கக் கருதி விசா­ரிக்க வேண்­டும் என்று ஆர்­யன் கான் தரப்­பில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்ட பிணை மனு மீதான விசா­ர­ணையை நீதி­மன்­றம் ஒத்­தி­வைத்­துள்­ளது.

போதைப்­பொ­ருள் வழக்­கில் சிக்­கி­யுள்ள ஆர்­யன் பிணை கோரி ஏற்­கெ­னவே தாக்­கல் செய்த மனுக்­களை மும்பை நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது. அவர் மும்பை உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளார்.

இதற்­கி­டையே ஆர்­யன், ஷாருக் சந்­திப்பு சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது. மகா­ராஷ்­டி­ரா­வில் சிறைக்­கைதி­களை உற­வி­னர்­கள் சந்­திப்­ப­தற்கு பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் உள்­ளன. இந்­நி­லை­யில், அவை திடீ­ரென தளர்த்­தப்­பட்டு ஷாருக்­கான் தன் மக­னைச் சந்­திக்க வழி­வ­குக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, ஷாருக் கான் வீட்­டில் நடத்­தப்­பட்ட சோத­னையை அடுத்து, அவ­ரி­ட­மும் அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்த இருப்­ப­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!