விசாரணையில் தாமதம்: உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

விசாரணையில் தாமதம்: உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

1 mins read
24c96c9a-bcdd-459f-9432-b227878e988e
-

புது­டெல்லி: லக்­கிம்­பூர் வன்­முறை தொடர்­பான வழக்கு விசா­ரணையை தாமதப்படுத்துவதாக உத்­த­ரப் பிர­தேச அர­சுக்கு உச்ச நீதி­மன்­றம் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

அம்­மா­நில போலி­சார் இது­வரை நான்கு பேரி­டம் மட்­டுமே விசா­ரணை நடத்தி இருப்­பதை நீதி­ப­தி­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

லக்­கிம்­பூர் வன்­மு­றைச் சம்­ப­வத்­தில் நான்கு விவ­சா­யி­கள் உட்­பட ஒன்­பது பேர் கொல்­லப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து, மத்­திய அமைச்சர் அஜய் மிஸ்­‌ரா­வின் மகன் உள்ளிட்ட சிலர் மீது போலி­சார் வழக்­குப் பதிவு செய்­த­னர். உச்ச நீதி­மன்­றத்­தின் கண்­ட­னத்­துக்­குப் பிறகே அமைச்­ச­ரின் மகன் கைது செய்­யப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக தொடுக்­கப்­பட்­டுள்ள பொது­நல வழக்கை உச்ச நீதி­மன்றம் விசா­ரித்­தது.

அப்­போது உத்­த­ரப் பிர­தேச காவல்­துறை விசா­ர­ணையை தாம­தப்­ப­டுத்­து­வ­தாக நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர். இத்­த­கைய தோற்­றத்தை உடைக்­கும் வகை­யில் விசா­ர­ணையை விரி­வு­ப­டுத்த வேண்­டும் என்­றும் வழக்கை எதிர்­கொண்­டுள்ள அனை­வ­ரி­ட­மும் விரை­வில் வாக்­கு­மூ­லம் பெற வேண்­டும் என்­றும் கூறினர்.

"44 சாட்­சி­யங்­கள் இருப்­ப­தா­கக் கூறி­விட்டு, இது­வரை நான்கு பேரி­டம் மட்­டுமே வாக்­கு­மூ­லம் வாங்­கி­யுள்­ளீ்­ர்­கள்," என்று நீதி­பதி­கள் சுட்டிக் காட்டினர்.