வெள்ளத்தில் கார் மூழ்கியதில் புது மணப்பெண் மரணம்

வெள்ளத்தில் கார் மூழ்கியதில் புது மணப்பெண் மரணம்

1 mins read
9de5c9c4-92d7-41d8-8eb7-c2915ef24f2b
தண்ணீரில் பாதி மூழ்கிய கார். ஓட்டுநர் தேங்கிய தண்ணீரின் அளவு தெரியாமல் வாகனத்தைச் செலுத்தியதாக நம்பப்படுகிறது. படம்: டெக்கான் குரோனிக்கல் இணையத்தளம் (ஏஎன்ஐ) -

திரு­மலை: திருப்­ப­தி­யில் மழை நீரில் கார் மூழ்­கி­ய­தால் அதில் சிக்­கி­யி­ருந்த புது மணப்ெ­பண் உயிரி­ழந்­தார்.

வெள்­ளிக்­கி­ழமை கர்­நா­ட­கா­வின் ரெய்ச்­சூ­ரி­லி­ருந்து மணப்­பெண் உட்­பட ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஏழு பேர் காரில் திருப்­பதி கோயி­லுக்­குச் சென்­ற­னர்.

திருப்­ப­தி­யில் பெய்த கன­மழை கார­ண­மாக ஆங்­காங்கே வெள்­ளம் சூழ்ந்து காணப்­பட்­டது.

வெஸ்ட் சர்ச் அருகே சுரங்­கப் பாதை­யில் சென்று கொண்­டி­ருந்­த­போது தேங்­கி­யி­ருந்த மழை நீரில் கார் மூழ்­கி­ய­தாக போலி­சார் தெரி­வித்­த­னர். ஓட்­டு­நர் ஆழம் தெரி­யா­மல் காரை செலுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் வாக­னம் வெள்­ளத்­தில் பாதி­ய­ள­வுக்கு மூழ்­கி­யது. எஸ்வி பல்­க­லைக் கழக போலி­சார், ஒரு குழந்தை உட்­பட ஆறு பேரை உயி­ரோடு மீட்­ட­னர்.

ஆனால் புது மணப்­பெண் சந்­தியா அதே இடத்­தில் உயி­ரி­ழந்­தார்.

போலி­சார் வழக்­குப் பதிவு செய்து இந்தச் ­சம்பவத்தை விசா­ரித்து வரு­கின்­ற­னர்.