மாத்திரை வடிவில் கொரோனா மருந்து

புது­டெல்லி: கொரோனா சிகிச்­சைக்கு மாத்­திரை வடி­வி­லான மருந்­துக்கு மத்­திய அரசு விரை­வில் அனு­மதி அளிக்க உள்­ளது.

இத்­த­க­வலை அறி­வி­யல், தொழில்­துறை ஆராய்ச்­சிக் கழ­கத்­தின் கொரோனா கட்­டுப்­பாட்­டுக்­கு­ழுத் தலை­வர் மருத்­து­வர் ராம் விஸ்­வ­கர்மா தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா பெருந்­தொற்­றுப் பர­வலை வெகு­வா­கக் கட்­டுப்­ப­டுத்தி உள்ள நிலை­யில், தடுப்­பூ­சிக்கு அடுத்­த­ப­டி­யாக மாத்­தி­ரை­களும் வரு­வது நல்ல முன்­னேற்­றம் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இனி எந்த நேரத்­தி­லும் இந்த மாத்­தி­ரை­க­ளுக்கு மத்­திய அர­சின் ஒப்­பு­தல் கிடைக்­கக்­கூ­டும் என்­றார் அவர்.

மெர்க், ஃபைஸர் ஆகிய இரு நிறு­வ­னங்­கள் இந்த மாத்­திரை வடி­வி­லான மருந்தை அறி­மு­கம் செய்ய உள்­ளன.

லேசான, மித­மான கொரோனா தொற்­றுப் பாதிப்பு உள்­ள­வர்­க­ளுக்கு இந்த மாத்­திரை நல்ல பலன் அளிக்­கும் என்­றும் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை இத­னால் குறை­யும் என்­றும் மெர்க் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

ஃபைஸர் நிறு­வ­னத்­தின் பேக்ஸ்­லோ­விட் மாத்­திரை குறித்த பரி­சோ­தனை முடி­வு­க­ளின்­படி அது மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யை­யும் உயி­ரி­ழப்­பை­யும் 89% தடுப்­ப­தா­கத் தெரிய வந்­துள்­ளது.

எனி­னும், முதற்­கட்­ட­மாக மெர்க் நிறு­வன மாத்­தி­ரைக்­குத்­தான் முத­லில் அனு­மதி கிடைக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"இனி­வ­ரும் நாள்­களில் தடுப்­பூ­சி­களை விட இந்த மாத்­தி­ரை­கள்­தான் நம் வாழ்க்­கை­யில் முக்­கிய பங்கு வகிக்­கும்," என ராம் விஸ்­வ­கர்மா தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, வீடு தேடிச்­சென்று தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை மேலும் தீவி­ர­மாக்க வேண்­டும் என மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா வலி­யு­றுத்தி உள்­ளார்.

நாட்­டி­லுள்ள அனை­வ­ருக்­கும் ஒரு தடுப்­பூ­சி­யே­னும் போடப்­பட்­டிருக்க வேண்­டும் என மத்­திய அ­ரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், இரண்­டா­வது தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளா­த­வர்­க­ளை­யும் வீடு தேடிச்­சென்று சந்­திக்க வேண்­டும் என அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார். நாடு முழு­வ­தும் 79.2 விழுக்­காடு பெரி­ய­வர்­க­ளுக்கு ஒரு தடுப்­பூ­சி­யும் 37 விழுக்­காட்­டி­ன­ருக்கு இரண்டு தடுப்­பூ­சி­களும் போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, நேற்று முன்­தி­னம் தொற்று எண்­ணிக்கை லேசாக அதி­க­ரித்­துள்­ளது. 13,091 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. 340 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இரு நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!