‘பாப்புலர் ஃபிரண்ட்’ அமைப்பு அலுவலகங்களில் அமலாக்க முகமை அதிரடி சோதனை நடவடிக்கை

திரு­வ­னந்­த­புரம்: பண மோசடி குற்­றச்­சாட்­டின் பேரில் கேர­ளா­வில் உள்ள 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பின் அலு­வ­ல­கங்­க­ளி­லும் அதன் தலை­வர்­க­ளின் வீடு­க­ளி­லும் மத்­திய அம­லாக்­கத்­து­றை­யி­னர் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

வடக்கு ஆசிய நாடு­களில் இருந்து இந்த அமைப்­பின் தலை­வர்­க­ளுக்கு பெருந்­தொகை அனுப்­பப்­பட்­டுள்­ளது என்­றும் அதைக் கொண்டு நாட்­டில் பல்­வேறு மோதல்­களை ஏற்­ப­டுத்த முயற்­சி­கள் நடக்­க­லாம் என்­றும் தங்­க­ளுக்கு ரக­சி­யத் தக­வல் கிடைத்­துள்­ள­தாக அம­லாக்க முகமை கூறி­யுள்­ளது. அந்­தத் தக­வ­லின் பேரில் சோதனை நடத்­தி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

பல்­வேறு இடங்­களில் நடத்­தப்­பட்ட சோத­னை­யின்­போது சில முக்­கிய ஆதா­ரங்­கள் சிக்­கி­ய­தாக அம­லாக்­கத்­துறை தெரி­வித்­துள்­ளது. ஆனால் அந்த அமைப்­பின் பொதுச்­செ­ய­லா­ளர் அனிஸ் அகமது, தங்­கள் மீதான குற்­றச்­சாட்­டில் சிறி­தும் உண்மை இல்லை என்­றும் சட்­ட­வி­ரோ­தப் பணப்­ப­ரி­மாற்­றங்­கள் ஏதும் நிக­ழ­வில்லை என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

இது ஒரு­வகை மலி­வான துன்­புறுத்­தும் உத்தி என்­றும் சங்­கப்­ப­ரி­வார் அமைப்­பு­க­ளின் தூண்­டு­தல் கார­ண­மாக மத்­திய அம­லாக்க முகமை இவ்­வாறு செயல்­ப­டு­வ­தா­க­வும் அவர் மேலும் சாடி உள்­ளார்.

அம­லாக்க முக­மை­யின் விசாரணைக்கு தங்­கள் அமைப்பு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கி வரு­வ­தாக 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பின் செய­லா­ளர் ஒஎம்ஏ சலாம் கூறி­னார்.

கண்­ணூர், முவாட்­டு­புழா, மலப்­பு­ரம், இடுக்கி ஆகிய நான்கு நக­ரங்­களில் அம­லாக்­கத்­து­றை­யி­னர் சோதனை நடத்தி உள்­ள­னர். இது­கு­றித்து தக­வல் அறிந்த அந்த அமைப்­பின் ஆத­ர­வா­ளர்­கள் சோதனை நடத்­தப்­பட்ட இடங்­களில் ஒன்­று­கூடி அம­லாக்­கத்­து­றை­யி­ன­ருக்கு எதி­ராக முழக்­கங்­களை எழுப்­பி­னர். பின்­னர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­னர்.

கடந்த பிப்­ர­வரி மாதம் டெல்­லி­யில் குடி­யு­ரிமை திருத்­தச்­சட்ட மசோ­தா­வுக்கு எதி­ராக பெரும் போராட்­டம் நடத்­தப்­பட்­டது. இது மட்­டு­மல்­லா­மல் வேறு சில சந்­தர்ப்­பங்­க­ளி­லும் நடை­பெற்ற போராட்­டங்­க­ளை­யும் அந்த அமைப்பு தூண்­டி­விட்­ட­தாக அம­லாக்க முகமை கரு­து­கிறது.

இதற்­கான நிதி முறை­கே­டான பணப்­ப­ரி­வர்த்­தனை மூலம் அந்த அமைப்பின் தலை­வர்­க­ளுக்கு வந்து சேரு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!