ஆந்திராவில் இரவு ஊரடங்கு: 3 நகரங்களுக்கு எச்சரிக்கை

அம­ரா­வதி: நாடு முழு­வ­தும் கொரோனா மூன்­றா­வது அலை ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலை­யில், ஆந்­திர மாநில அரசு இரவு ஊர­டங்கை அமல்­ப­டுத்­தி­யுள்­ளது.

பல்­வேறு மாநி­லங்­களில் வார இறு­தி­யில் அல்­லது இரவு நேர ஊர­டங்கு அம­லில் உள்­ளது. பல மாநி­லங்­களில் மக்­கள் நட­மாட்­டத்­துக்கு கடும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், ஆந்­தி­ரா­வில் கட்­டுக்­குள் இருந்த கொரோனா மீண்­டும் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஐந்து நாள்­களில் மட்­டும் நான்கா­யி­ரத்­துக்கும் அதி­க­மா­னோரை கிருமி தொற்­றி­யுள்­ளது.

இதை­ய­டுத்து, இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊர­டங்கு அம­லுக்கு வந்­துள்­ளது.

அம்­மா­நி­லத்­தில் உள்ள 175 சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­க­ளி­லும் தலா ஒரு கொரோனா மையத்தை நிறுவ வேண்­டும் என அதி­கா­ரி­க­ளுக்கு முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி உத்­த­ர­விட்­டுள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் பத்­தா­யி­ரத்­துக்­கும் கீழ் பதி­வாகி வந்த அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை, கிடு­கி­டு­வென அதி­க­ரித்து, தற்­போது 33,470ஆக உள்­ளது. நேற்று முன்­தி­னம் அங்கு மேலும் எட்டு பேர் தொற்று பாதிப்­புக்கு பலியாகி­விட்­ட­னர்.

கர்­நா­ட­கா­வில் வெகு­வாக குறைந்­தி­ருந்த தொற்று எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 12 ஆயி­ரத்தை நெருங்கி உள்­ளது. அங்­கும் இரவு, வார இறுதி நாள் ஊர­டங்கு அம­லில் உள்­ளது. அம்­மா­நில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்­மைக்­கும் கிருமி தொற்­றி­யுள்­ளது.

மத்­திய பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங், பீகார் முதல்­வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலை­வர் ஜே.பி.நட்டா ஆகி­யோ­ருக்­கும் தொற்று பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, டெல்லி, மும்பை, கோல்­கத்­தா­வில் எதிர்­வரும் 15ஆம் தேதி கொரோனா தொற்று உச்­சத்தை அடை­யும் என கான்­பூர் இந்­திய தொழில்­நுட்ப மையத்­தின் பேரா­சி­ரி­யர் மனீந்­தர் அகர்­வால் எச்­ச­ரித்­துள்­ளார்.

எனி­னும், மக்­கள் பீதி அடை­யத் தேவை­யில்லை என அவர் குறிப்­பிட்­டுள்­ளார். "பிப்­ர­வரி முதல் வாரம் வரை எந்த அள­வுக்கு உச்­சத்­தில் இருக்­கி­றதோ, அதே­போன்று மார்ச் மாத மத்­தி­யில் தொற்­றுப்­ப­ர­வல் வெகு­வா­கக் குறை­யும்," என்று மனீந்­தர் அகர்­வால் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, டெல்­லி­யில் உண­வ­கங்­கள், தனி­யார் அலு­வ­ல­கங்­களை மூட வேண்­டும் என பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் உத்­த­ர­விட்­டது.

மாநி­லத்­தில் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் விகி­தம் 23%ஆக அதி­க­ரித்­துள்­ளது. இத­யை­டுத்து, கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!