அரசியல்வாதியின் பண்ணை வீட்டில் பாலியல் தொழில்

மேகாலயா காவல்துறை: 73 பேர் கைது; 6 சிறார் மீட்பு; 36 வாகனங்கள், மது பறிமுதல்

காரோ ஹில்ஸ்: மேகா­லயா மாநிலத்­தில் பாஜக அர­சி­யல்­வாதி ஒரு­வருக்­குச் சொந்­த­மான பண்ணை வீட்­டில் பாலி­யல் தொழில் நடந்­த­தா­கக் கூறி அந்த மாநில காவல்­துறை 73 பேரைக் கைது செய்து இருக்­கிறது.

அந்த வீட்­டி­லி­ருந்து சிறார் ஆறு பேர் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்து இருக்­கிறது.

அந்­தப் பண்ணை வீடு மேகாலய மாநில பாஜக துணைத் தலை­வர் பெர்­னார்டு மராக் என்­ப­வ­ருக்­குச் சொந்­த­மா­னது.

அது மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்­டத்­தில் அமைந்து இருக்­கிறது. கைதான அனை­வ­ரும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப் படுத்­தப்­படு­வ­தாக மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்ட காவல்­துறை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

பாலி­யல் தொழி­லின் கார­ண­கர்த்­தா­வா­கக் கரு­தப்­படும் பெர்­னார்டு தலை­ம­றை­வாகி உள்ளார். ஷில்­லாங் சாதார் காவல் நிலை­யத்­தில் முன்­னி­லை­யா­கப் போவ­தாக அவர் தெரி­வித்து இருந்­தார்.

ஆனால், அங்கு அவர் வர­வில்லை என்று காவல்­துறை அறிக்கை தெரி­விக்­கிறது.

ஒரு சிறு­மி­யைக் காண­வில்­லை­என்று 2022 பிப்­ர­வரி 22ஆம் தேதி புகார் தெரி­விக்­கப்­பட்­டது. அந்­தப் புகார் தொடர்­பில் எடுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­யை­யொட்டி பண்ணை வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்­டது.

பெர்­னார்­டுக்கு எதி­ராக பல வழக்­கு­கள் பதி­யப்­பட்டு இருக்­கிறது என்­றா­லும் அவரை கைது செய்­வ­தற்­கான ஆணை பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை என்று அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

அந்­தப் பண்ணை வீடு பாலி­யல் தொழி­லுக்­குத் தோதாக மாற்றி அமைக்­கப்­பட்டு இருந்­தது. அதி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­யில் 36 வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. 416 மது­பா­னப் போத்­தல்­கள், 47 கைப்பே­சி­கள், ஆணுறை­கள் முத­லான பல­வும் அதி­கா­ரி­களி­டம் சிக்கி இருக்­கின்­றன.

பண்ணை வீட்­டின் உரி­மை­யா­ள­ரான பெர்­னார்டு மீது ஏற்­கெ­னவே 25 குற்­ற­வி­யல் வழக்­கு­கள் இருப்­ப­தாகக் காவல்­துறை தெரி­வித்­தது.

பெர்­னார்டு 2000ஆம் ஆண்­டில் கலைக்­கப்­பட்ட 'அச்­சிக் தேசியத் தொண்­டூ­ழிய மன்­றம் (பி)' என்ற தீவி­ர­வாத அமைப்­பின் தலை­வ­ராகச் செயல்­பட்­டார் என்­றும் காவல்­துறை கூறு­கிறது.

ஆனால், இந்­தக் குற்­றச்­சாட்­டு­களைப் பெர்­னார்டு மறுத்து வரு­கிறார். "மேகா­ல­யா­வில் காங்­கி­ரஸ் ஆட்சி நடக்­கிறது. ஆகை­யால், என்னைப் பழி வாங்­கு­வ­தற்­காக அந்த ஆட்சி, காவல்­து­றையை ஏவி விட்டு இருக்­கிறது.

"முதல்­வர் கே சங்மா தன் மீது களங்­கம் கற்­பிப்­ப­தற்­காக அர­சி­யல் ரீதி­யில் தன்னைப் பழி­வாங்க முயன்று வரு­கி­றார்," என்று பெர்­னார்டு தெரி­வித்து உள்­ளார்.

பண்ணை வீட்­டில் இருந்து மீட்­கப்­பட்ட நான்கு சிறு­வர்­களும் இரண்டு சிறு­மி­களும் அந்த வீட்­டில் இருந்த பதுங்கு அறை­யில் அடைத்து வைக்­கப்­பட்டு இருந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறினர்.

பண்ணை வீட்டு உரி­மை­யா­ள­ரான பெர்­னார்டு காவல்­து­றைக்கு உரிய ஒத்­து­ழைப்பைத் தரவேண்டும் என அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!