உத்தரகாண்ட் கொலை: இளம்பெண்ணின் இறுதிச் சடங்குக்கு குடும்பத்தினர் ஒப்புதல்

உத்தரகாண்ட் கொலை: இளம்பெண்ணின் இறுதிச் சடங்குக்கு குடும்பத்தினர் ஒப்புதல்

1 mins read
5b08a599-a880-4d61-a42e-66fafc74d6fe
-

ஹரித்­து­வார்: உத்­த­ர­காண்ட் மாநில ஓய்வு விடு­தி­யில் வர­வேற்­பா­ள­ராக வேலை­பார்த்த அங்­கிதா பண்­டாரி எனும் 19 வய­துப் பெண் கொலை­செய்­யப்­பட்­டதை அடுத்து ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

பார­திய ஜனதா கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான வினோத் ஆர்­யா­வின் மகன் புல்­கிட் ஆரி­யா­வின் ஓய்வு விடு­தி­யில் அங்­கிதா வேலை பார்த்­தார்.

அவ­ரது சட­லம் கால்­வாய் ஒன்­றில் கண்­டெ­டுக்­கப்­பட்­டதை அடுத்து மாநில முதல்­வர் புஷ்­கர் சிங் தாமி சிறப்பு விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டார்.

பிரே­தப் பரி­சோ­த­னை­யில் அங்­கிதா நீரில் மூழ்கி இறந்­த­தா­க­வும் அவ­ரது உட­லில் காயங்­கள் இருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

இதைத் தொடர்ந்து அங்­கி­தா­வின் குடும்­பத்­தி­னர் அவ­ரது உடலை தக­னம் செய்ய மறுத்து நீதி­கேட்டு ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

குடும்­பச் சூழ­லால் கல்­வி­யைத் தொடர முடி­யா­மல் வேலை­க்குச் சேர்ந்த அங்­கிதா தனது முதல் மாதச் சம்­ப­ளத்­தைக்­கூட வாங்­க­வில்லை என்று உற­வி­னர்­கள் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

ஸ்ரீந­கர்-கேதார்­நாத் நெடுஞ்­சாலை­யில் அவர்­கள் மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

பின்­னர் நேற்று மாலை, குடும்­பத்­தி­னர் அங்­கி­தா­வின் இறு­திச் சடங்­கு­களை நடத்த ஒப்­புக்­கொண்­ட­தா­க­வும் ஆனால் கூட்­டம் சேரா­மல் கட்­டுப்­ப­டுத்­தும்­படி அதி­கா­ரி­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் என்­டி­டிவி செய்தி நிறு­வ­னம் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.