கேரளாவில் நீடிக்கும் சோதனை, கைது நடவடிக்கைகள் ‘ஹவாலா’ முறையில் 120 கோடி ரூபாய் திரட்டிய ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பைச் சேர்ந்தவர்­க­ளின் வீடு­கள், கடை­களில் அம்­மா­நில காவல்­துறை நேற்று முன்­தி­னம் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது. அப்­போது மடிக்­கணி­னி­கள், கணக்கு விவ­ரங்­கள், கைப்பே­சி­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கிறது.

கண்ணூர் மாவட்­டத்­தின் பல்வேறு பகு­தி­களில் இந்­தச் சோதனை நடை­பெற்­றது என்­றும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முழு அடைப்புப் போராட்­டத்­தின்­போது நடை­பெற்ற வன்­மு­றை­ தொடர்­பாக இந்தச் சோதனை நடத்­தப்­பட்­டது என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பயங்கரவாதச் செயல்களை ஊக்­கு­விக்க நிதி­யு­தவி செய்­த­தாக­வும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தா­க­வும் 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பின் மீது தேசிய புல­னாய்வு முகமை குற்­றம்­சாட்டி உள்­ளது.

இதை­ய­டுத்து நாடு முழுவதும் 15 மாநி­லங்­களில் அந்த அமைப்­பைச் சேர்ந்த முக்­கிய நிர்­வா­கி­க­ளுடன் தொடர்­பு­டைய இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்­டது. அப்போது நூற்­றுக்­கும் மேற்­பட்­டோரை புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

இந்தக் கைது நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து, கேர­ளா­வில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்­டம் நடை­பெற்­றது.

அப்­போது நிகழ்ந்த வன்முறைச் சம்­ப­வங்­க­ளின்­போது பல வாகனங்­கள் எரிக்­கப்­பட்­டன. அர­சுப் பேருந்­து­கள் மீது சிலர் கற்­களை வீசித் தாக்­கு­தல் நடத்­தி­னர். கடை­க­ளைத் திறந்து வைத்­தி­ருந்த வியா­பா­ரி­கள் மிரட்­டப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், முழு அடைப்­பின்­போது 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் முக­மூடி அணிந்­து­கொண்டு, 'கொரில்லா' தாக்­கு­த­லில் ஈடு­பட்ட­தாக கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் குற்­றம்­சாட்டி உள்­ளார்.இவ்வாறு வன்­மு­றை­யில் ஈடு­பட்ட யாரும் தப்ப முடி­யாது என்­றும் அவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா'வுடன் தொடர்­புள்ள நிறு­வ­னங்­க­ளி­லும் அம­லாக்­கத்­துறை சோதனை மேற்­கொண்­டது. அப்­போது பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளுக்கு உத­வும் வகை­யில் அந்­நி­று­வ­னங்­கள் சுமார் ரூ.120 கோடி நிதி திரட்டி, அதை வங்­கி­களில் செலுத்தி இருப்­பது தெரியவந்­துள்­ளது. இத்தொகை உள்­நாட்­டி­லும் வளை­குடா நாடு­க­ளி­லும் திரட்­டப்­பட்­டுள்­ளது. 'ஹவாலா' முறை­யில் பணப்­ப­ரி­மாற்­றம் நிகழ்ந்­துள்­ள­தா­க­வும் அம­லாக்­கத்­துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!