சமூக ஊடகங்கள் மூலம் ஆயுத விற்பனை

புது­டெல்லி: சமூக ஊட­கங்­கள் மூல­மாக விளம்­ப­ரங்­களை வெளி­யிட்டு, ஆயு­தங்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­வதை டெல்லி காவல்­து­றை­யி­னர் கண்­ட­றிந்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, ஆயுத விற்­ப­னைக் கும்­ப­லைக் கைது செய்து செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

டெல்­லியை ஒட்­டி­யுள்ள குரு­கி­ராம் பகு­தி­யில் அனு­ம­தி­யின்றி ஆயு­தங்­கள் விற்­பனை செய்­யப்­படு­வ­தாக அண்­மை­யில் காவல்­து­றைக்கு தெரி­ய­வந்­தது.

இது­தொ­டர்­பான விளம்­ப­ரங்­கள் முக­நூல், வாட்ஸ் அப் மூலம் வெளி­யி­டப்­ப­டு­வ­தும் அதி­கா­ரி­கள் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்­டது. விளம்­ப­ரத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட தொலை­பேசி எண் மூலம் கைத்­துப்­பாக்­கி­கள் விற்­ப­னைக்கு இருப்­ப­தாக தக­வல் பரப்­பப்­பட்­டது தெரிய வந்­தது.

அந்த வட்­டா­ரத்­தைச் சேர்ந்த கலா ஜாத்­தேரி என்ற ரவு­டி­யின் பெய­ரில் விளம்­ப­ரங்­கள் வெளி­யாகி வந்­தன. மூன்று கைப்­பேசி எண்­க­ளைப் பயன்­ப­டுத்தி மூன்று வெவ்­வேறு ஃபேஸ்புக் பக்­கங்­கள் திறக்­கப்­பட்­ட­தும் வெவ்­வேறு வித­மான விளம்­ப­ரங்­கள் வெளி­யி­டப்­பட்­ட­தும் தெரிய வந்­துள்­ளது.

இது குறித்து தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தாக காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!