ஆரஞ்சுப் பழ பெட்டிகளுக்குள் ரூ.1,476 கோடி போதைப்பொருள்: மும்பையில் பறிமுதல்

மும்பை: ஆரஞ்சுப் பழங்­களை ஏற்றிச் செல்­வ­தா­கக் கூறி போதைப் பொருள்­க­ளைக் கடத்­திய கும்­பல் ஒன்று மகா­ராஷ்­டி­ரா­வில் சிக்­கி­யது.

மும்பை வரு­வாய் நுண்­ண­றிவு இயக்­குந­ரக அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யின்­போது ரூ.1476 கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

நேற்று முன்­தி­னம் மகா­ராஷ்­டிரா தலை­ந­கர் மும்­பை­யின் பல்­வேறு பகு­தி­களில் அதி­கா­ரி­கள் வாக­னச் சோத­னை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது வஷி பகு­தி­யில் லாரி ஒன்றை நிறுத்தி சோத­னை­யிட்டனர். அப்­போது அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தேகம் ஏற்­பட்­டதை அடுத்து லாரி­யில் வந்­த­வர்­களை விசா­ரித்­த­னர்.

ஓட்­டு­நர் முன்­னுக்­குப் பின் முரணா­கப் பேசி­ய­தால் மும்பை வரு­வாய் நுண்­ண­றிவு இயக்குநரக அதிகா­ரி­க­ளின் சந்­தே­கம் வலுத்தது. இறக்­கு­மதி செய்­யப்­பட்ட ஆரஞ்சுப் பழங்­கள் மட்­டுமே லாரி­யில் இருப்பதாக ஓட்­டு­நர் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து லாரி­யில் சோதனை­யிட்­ட­போது, ஆரஞ்சுப் பழங்­கள் இருந்த மரப்பெட்­டி­க­ளுக்குள் 198 கிலோ எடை கொண்ட மெத்­தாம்­பெட்­ட­மைன், ஒன்­பது கிலோ எடை­யுள்ள அதிக தூய்மை­யான கோகைன் உள்­ளிட்ட போதைப் பொருள்­கள் இருப்­பது கண்­டு­பிடிக்­கப்­பட்­டன.

இவற்­றின் அனைத்­து­ல­கச் சந்தை மதிப்பு ரூ.1,476 கோடி எனத் தெரி­ய ­வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து ஆரஞ்சுப் பழங்களை இறக்­கு­மதி செய்­த­தாகக் கூறப்­ப­டு­ப­வ­ரி­டம் அதி­காரிகள் விசா­ர­ணை­யைத் தொடங்கி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!