திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.
கேரள மாநில உள்துறை, சுற்றுலாத்துறை அமைச்சர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.