நடுவானில் புகை: விமானம் பத்திரமாக தரையிறங்கியது

ஹைத­ராபாத்: விமா­னம் தரை­யி­றங்­கி­ய­போது பய­ணி­கள் அமர்ந்­துள்ள பகு­தி­யில் இருந்து திடீ­ரென புகை மூண்­ட­தால் பீதி நில­வி­யது.

ஸ்பைஸ்­ஜெட் விமா­னம் ஒன்று புதன்­கி­ழமை இரவு கோவா­வில் இருந்து ஹைத­ரா­பாத் நோக்கி சென்று கொண்­டி­ருந்­த­போது திடீ­ரெ­னப் புகை மூண்­டதை அடுத்து, அது பலத்த முன்­னெச்­ச­ரிக்கை ஏற்­பா­டு­க­ளு­டன் தரை­யி­றங்­கி­யது.

அந்த விமா­னத்­தில் 86 பய­ணி­கள் இருந்­த­னர். புதன்­கி­ழமை இரவு 11 மணி­ய­ள­வில் அது ஹைத­ரா­பாத்­தில் தரை­யி­றங்­கி­யது.

முன்­ன­தாக, ஹைத­ரா­பாத் விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்க வேண்­டிய ஒன்­பது விமா­னங்­கள் அரு­கில் உள்ள விமான நிலை­யங்­களில் தரை­யி­றங்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டன.

அண்­மைய சில மாதங்­களில் ஸ்பைஸ்­ஜெட் விமா­னங்­களில் பாது­காப்பு தொடர்­பான சில சம்பவங்­கள் எழுந்­துள்­ளன.

இத்­த­கைய குறை­பா­டு­க­ளைத் தவிர்க்க உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, ஹைத­ரா­பாத்­தில் விமா­னம் தரை­யி­றங்­கி­ய­தும் அவ­சர கால வழி­யின் மூலம் பய­ணி­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர். அப்­போது ஒரு­வர் லேசாக காய­ம­டைந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணையம் உரிய விசா­ரணை மேற்­கொள்ள இருப்­ப­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!