10 ஆண்டுக்குப் பின் தந்தையை அடையாளம் கண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்த சிறுவன்

ராம்கார்: ஜார்க்கண்டில் பிரிந்துபோன தந்தையுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 13 வயது சிறுவன் மீண்டும் இணைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்டின் ராம்காட்டில் உள்ள ‘தெய்வீக ஓம்கார் மிஷன்’ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த சிவம் வர்மா, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தை டிங்கு வர்மாவை அடையாளம் கண்டு, கட்டியணைத்து அன்பைப் பொழிந்துள்ளார்.

கடந்த 2013ல் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரான டிங்கு வர்மாவின் மனைவி சந்தேகத்துக்குரிய முறையில் இறந்துபோனது தொடர்பாக டிங்கு வர்மா கைது செய்யப்பட்டார். அப்போது சிவனுக்கு மூன்று வயது.

தன்னந்தனியாக இருந்த சிவனை அதிகாரிகள் அனாதை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், டிங்கு வர்மா இரண்டு ஆண்டு களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையாகி, ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வந்தார்

தற்போது ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்து வரும் சிவம், தொண்டு நிறுவனம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் பணியில் அவ்வப்போது உதவிவந்தார். அண்மையில் அன்னதானம் வழங்கியபோது, சிறையில் இருந்து வெளியே வந்த டிங்குவும் வரிசையில் நின்று உணவு வாங்கினார்.

அப்போது, சிவம் தன் தந்தையை அடையாளம் கண்டுகொள்ள, டிங்குவும் 10 ஆண்டுகளுக்குப் பின் தன் மகனைத் தெரிந்துகொண்டு கண்ணீர் மல்க கட்டித் தழுவிக்கொண்டார்.

இது குறித்து சிவம் கூறுகையில், “தந்தையை மீண்டும் சந்திப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது தெய்வச் செயல்,’’ என்றார்.

உரிய நடைமுறைகளுக்குப் பின், டிங்குவுடன் சிவத்தை தொண்டு நிறுவன அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

சிவம் வர்மா தந்தை டிங்கு வர்மா வுடன்

படம்:

டுவிட்டர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!