லாட்டரி சீட்டில் ரூ.45 கோடி பரிசை வென்ற தாதி

திரு­வ­னந்­த­பு­ரம்: வளை­குடா நாடான அபு­தா­பி­யில் தாதி­யா­கப் பணி­பு­ரிந்து வரும் லவ்லி மோள் அச்­சம்­மாள் (படம்) மீது 20 மில்­லி­யன் திர்­ஹாம் அதா­வது ரூ.45 கோடி அளவுக்கு அதிர்ஷ்ட மழை பொழிந்துள்­ளது.

கேர­ளா­வைச் சேர்ந்­த­வ­ரான லவ்லி மோள் அச்­சம்மா, அபு தாபி­யில் கடந்த 21 ஆண்டு களாக தனது குடும்­பத்­து­டன் வசித்து வரு­கி­றார். தாதி­யான இவர், அவ்­வப்­போது அபு­தா­பி­யில் வெளி­யி­டப்­படும் லாட்­டரி சீட்டை வாங்­கு­வது வழக்­கம்.

இவர் அண்­மை­யில் வாங்­கி­யி­ருந்த லாட்­டரி சீட்­டின் குலுக்­கல் முடிவு கடந்த சனிக்­கி­ழமை வெளி­யா­னது. இதில் முதல் பரி­சாக ரூ.45 கோடியை லவ்லி வென்­றுள்­ளார். “தாங்­கொ­ணாத மகிழ்ச்­சி­யில் உள்­ளேன். இந்­தப் பணத்தின் ஒரு பகுதியில் அறக்­கட்­டளை ஒன்றை நிறுவி ஏழை­க­ளுக்கு உத­வு­வேன். பணத்தை உறவினர்­க­ளு­டன் பகிர்ந்துகொள்வேன். எனது மைத்துனருக்கும் பங்கு கொடுப்பேன். ஒவ்­வொரு மாத­மும் எனது கண­வர்தான் லாட்­டரி சீட்டு வாங்­கு­வார். இம்­முறை நான் வாங்கிய சீட்டுக்கு அதிர்ஷ்டம் விழுந்து உள்ளது,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!