மறைந்த மனைவி 'சிலையாய்' வாழ்கிறார்

கர்நாடகாவின் தொழில்அதிபரான திரு ஸ்ரீநிவாச குப்தாவின் மனைவி திருமதி மாதவி, 3 ஆண்டுகளுக்கு முன் வாகன விபத்தில் இறந்துவிட்டார்.

அச்சமயம் தம் மனைவியின் கனவு இல்லத்தின் கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டிருந்தன.

இன்றோ வீட்டு கட்டுமான பணிகள் முடிந்துவிட்டது ஆனால் புது வீட்டில் அன்பான மனைவி இல்லயே என்ற வருத்தம்.

வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

மறைந்த திருமதி மாதவியின் மெழுகுச் சிலை இருக்கையில் அமர்ந்திருப்பது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மிகத் தத்ரூபமான பாணியில் திருமதி மாதவியின் சிலை செதுக்கப்பட்டிருப்பது வீட்டில் இரு ந்த கணவருக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் ஆறுதலாக இருந்தது.

குறிப்பாக, அவருக்கு விருப்பமான சேலை நிறம், ஆபரணங்கள், புன்னகைக்கும் பாணி போன்ற உன்னிப்பான விவரங்களை வடிவமைப்பாளர் கருத்தில் எடுத்துக்கொண்டார்.

அம்மாவின் ஆசை நிறைவேறிவிட்டதே என்ற ஆனந்தத்தில் அவரது இரு மகள்களும் சிலையாய் வாழும் தாயாருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

மனதை நெகிழ வைக்கும் இந்த நூதன முயற்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon