சுடச் சுடச் செய்திகள்

முரசைக் கேளுங்கள்: வேலை வாய்ப்பு, வாழ்க்கைத்தொழில்

முரசைக் கேளுங்கள்: வேலைகள், வாழ்க்கைத்தொழில், எப்படி வேலை தேடுவது, எப்படி பயிற்சி பெறுவது போன்ற சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார் மூத்த வாழ்க்கைத்தொழில் பயிற்சியாளர் இந்திரா ராமசுந்தரன். 

நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர் எனப்படும் நால்வகைத் துறைகளில் ஒன்றிலிருந்து வேலையிழந்துள்ளவர் நான். ஒரு வேலைக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கூகல் இணையத்தளத்தில் பல வேலைவாய்ப்புகள் காணப்பட்டாலும் சிங்கப்பூரில் உள்ள வேலைகளுக்கு எந்த இணையத்தளம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

இல்லங்களுக்கு அருகில், விரும்பும் தொழில்துறைகள், ஊதியம் போன்ற வேலை தேடுவோரின் தேவைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு இணையத்தளமும் தனிப்பட்ட பயனளிக்கக்கூடியவை என்று பொதுவாக அறியப்படுகின்றன.

சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு (Workforce Singapore) ஏற்படுத்தியுள்ள MyCareersFuture.gov.sg எனும் வேலைவாய்ப்புகள் வழங்கும் இணையத்தளத்தில் வேலை நாடுவோர் தங்களின் திறன்களுக்கு  பொருந்தும்படியான அரசாங்கத்தின் ஆதரவுடன் கிடைக்கின்ற வேலைகளைத் தேட வகை செய்யப் பட்டுள்ளது. இதன்வழி சிங்கப்பூரர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு ஒரு வகையான மானியத்தை அரசாங்கம் வழங்கும். 
உங்களின் திறன்களுக்கு ஏற்ப நீங்கள் வேலைகளைத்  தேடி விண்ணப்பம் செய்வது முக்கியமானதாகும். உங்களுக்கே உரிய தனித்தன்மைகளையும் திறன்களையும் வெளிக்காட்டக்கூடிய வேலை களுக்கு விண்ணப்பம் செய்க. உங்களது சுயக்குறிப்பு விவரப்பட்டியலில் அவற்றைத் தெளிவாக எடுத்துக்காட்டுங்கள். அதன் பயனால், கடமைகளை நிறைவேற்றத் தேவையான திறன்களும் இதர ஆற்றல்களும் உங்களிடம் உள்ளன என்பதை உங்களை வேலைக்கு அமர்த்தவிருக்கும்  மேலாளர் அறிந்துகொள்வார்.  

எனக்கு இந்த வருடம் 45 வயதாகிறது. நான் மாற்று வேலை தேடுகின்றேன். மத்திய வயதில் தொழில் மாறவிரும்பும் என்னைப்போன்றவர்களுக்கு எவ்வித வேலைகள், பயிற்சிகள் உள்ளன?

மாற்றுவேலை தேடுவதற்கு முன்பு சிலவற்றைப் பற்றி தாங்கள் சிந்திக்கவேண்டும். எவ்வித வேலைகள் உங்களுக்கு விருப்பமானவை? 
அத்தகைய வேலையைத் திறம்பட செய்திட உங்களிடம் தேவையான திறன்களும் போட்டித்தன்மையும் 
பண்புக்கூறுகளும் உள்ளனவா? உங்களிடம் தற்போது உள்ள திறமைகள் உங்களை வேலைக்கு அமர்த்தவிருக்கும் நிறுவனத்துக்கு மேன்மை அளித்திட வல்லவையா? 

அப்படியானால், அந்த குறிப்பிட்ட துறையைச் சார்ந்த வட்டத்தில் உள்ளோர்களிடமும் நண்பர்களிடமும் மேலும் ஆழமான புரிதலை அடைவதற்கு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள் அல்லது Careers Connect (வாழ்க்கைத்தொழில் இணைப்பு) வழி எங்களை தொடர்புகொள்ளுங்கள். 

எடுத்துவைக்க வேண்டிய படிகளைக் கண்டறிந்து தேவையான திறன்கள் இல்லையெனில் அவற்றை அடைவதற்கும் உங்களின் திறன்களையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி நேர்காணல் வாய்ப்புகளை முதலாளிகளிடம் பெறுவதற்கும் நாங்கள் உங்களுடன் பயணித்து வழிகாட்ட முடியும். 

மத்திய   வயதில்      வாழ்க்கைத் தொழிலை மாற்ற விரும்புவோர் SGUnited Mid-Career Pathways Programme (SGUP)  (மத்திய வயது வாழ்க்கைத்தொழில் வழிவகைகள் திட்டம்) மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இந்தத் திட்டம் 40 மற்றும் 50 வயதுகளை எட்டிய சிங்கப்பூரர்கள் தற்காலிக முறையில் 9 மாதங்கள் வரை அவர்களை ஏற்றுக்கொள்ளும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு களுடன் பயிற்சி மானியத்தைப் பெறுவதற்கும் வழி செய்கின்றது. 

நிபுணத்துவ மாற்றுவேலைத் திட்டம் (Professional Conversion Programme - PCP) என்ற மற்றொரு கட்டமைப்பான திட்டமும் உள்ளது. இதன்படி வகுப்பறை பயிற்சி வசதிகளுடன் தேவையான திறன்களைக் கற்றுக்கொண்டு வேலைகளை உடனடியாகத் தொடங்கும் விதத்தில் நேரடி வேலைப் பயிற்சிகளும் பங்கேற்போருக்கு வழங்கப்படுகிறது.  தற்பொழுது 30 பிரிவுகளில் சுமார் 100 நிபுணத்துவ மாற்று வேலைத் திட்ட பங்கேற்பாளர்கள் உள்ளனர். வேலை தேடுவோர், ஊதியத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கவேண்டியது  அவசியமானது. 

வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்கள், அல்லது வாழ்க்கைத்தொழில் தூதர்கள் என்போரைப்பற்றி ஊடகத்தில் கேள்விப்பட்டேன். அவர்கள் யார் மற்றும் எவ்வாறு எனது வேலை தேடும் முயற்சியில் உதவுகிறார்கள்?

வாழ்க்கைத்தொழில் தூதரிடம் வேலை தேடுவோர் முதலில் உரையாட, அவர் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டு உங்கள் பின்புலத்தையும் வேலை நிலவரத்தையும் அறிந்துகொண்ட பின்னர், அடுத்த நடவடிக்கைகளைக் குறித்து அறிவுறுத்துவார்.  

மேலும் ஆழமான பயிற்சி தேவைப்படுவோர் வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்களை நாடி, வேலை  தேடும் பாதையில் உள்ள தடைகளைக் கண்டறிந்து அவற்றைக் கடந்திட தேவையான மாற்றங்களைக் குறித்த ஆலோசனைகளைப் பெறலாம். 

தற்பொழுது நான் வேலை இல்லாமல் இருப்பதால் எந்தப் பிரிவுகளில் வேலைக்கு ஊழியர்கள் அமர்த்தப்படுகின்றனர் என்பதை அறியலாமா?

குறிப்பிட்ட தொழில்துறைகளை கொவிட்19 தொற்று பாதித்திருந்தாலும் மின் வர்த்தகம், உற்பத்தித் துறை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம், சமூக மற்றும் நிதித் துறைச் சேவைகளில்  துரிதமான வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்தி பாதைகளைத் திறந்துவிட்டுள்ளது.  

மாறாக நீங்கள் SGUnited Jobs and Skills (SGUJS)  Package என்ற வேலைத் திறன்கள் திட்டத்தின் வழி, வேலைகளுடன் இணைந்த பயிற்சி முறைகள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் ஆகியனவற்றை ஆராயலாம். 

சிலருக்கு இவை அதிகம் பழக்கப்படாமல் இருந்தாலும் வழக்கமானவற்றைக் கடந்து, புதிய பொறுப்புகளையும் தொழில் பிரிவுகளையும் ஏற்றுக்கொண்டு செயலாற்றும்படி நான் ஊக்குவிக்கின்றேன்.  மேலும் இந்த கொவிட் காலத்தில்,  அதிகம் தேவைப்படும் குறுகிய கால வேலைகளை ஏற்றுக்கொள்வதையும் நீங்கள் பரிசீலிக்கலாம். 

நான் தற்பொழுது வேலை இல்லாமல் இருக்கிறேன். சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு (WSG) வழங்கும் திறன் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்று, பயிற்சிகாலம் முடிந்ததும் வேலையில் சேர்ந்திட விரும்புகிறேன். எந்தப் பயிற்சித் திட்டத்தை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்?

நீங்கள் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதை  அறிய பெருமகிழ்ச்சி! உருவாகும் வாய்ப்புகளை ஏற்கத் தயாராக இருக்கவும் நடைமுறைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும் புதிய திறன்களைக் கற்பது பேருதவியாக அமையும்.  பல பயிற்சித் திட்டங்கள் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

உதாரணமாக புதிய பட்டதாரிகள் the SGUnited Traineeships Programme எனப்படும் வேலை  இணைப்புடன் கூடிய பயிற்சித் திட்டத்தைப் பயன்படுத்தலாம். மத்திய வயதில் மாற்று வேலை தேடுவோர் SGUnited Mid-career Pathways Programme (மத்திய வயது வாழ்க்கைத்தொழில் வழிவகைகள் திட்டம்) வழி  தொழில்துறைக்குத் தேவையான மதிப்பு நிறைந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ளலாம். 

புது வேலையை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் திறன் தொடர்பான பயிற்சிகளை வேலை தேடுவோருக்கு வழங்கும் Professional Conversion Programmes (PCPs) எனப்படும் நிபுணத்துவ மாற்றுவேலைத் திட்டத்தையும் நீங்கள் பரிசீலிக்கலாம். ஆயினும், ஒருவரின் தேவைகளையும் நிலைமையையும் பொறுத்தே இந்தத் திட்டங்கள் அவருக்குப் பொருந்துகின்றனவா என்பது அமையும். தாங்கள் எங்களின் Careers Connect (வாழ்க்கைத்தொழில் இணைப்பு) மூலம் வாழ்க்கைத்தொழில் பற்றிய வழிகாட்டுதலுக்கு அணுகலாம்.

மேல் விவரங்களுக்கு நீங்கள் காணவேண்டிய இணையத்தளம் www.go.gov.sg/ccmcf-careertrial
நாங்கள் மேலும் உதவிடவும் எங்களிடம் பேசவும் Careers Connect (வாழ்க்கைத்தொழில் இணைப்பு) வழியாக தொடர்புகொள்ளவும்.

 

அறிமுகம்

இந்திரா ராமசுந்தரன்,
மூத்த வாழ்க்கைத்தொழில் பயிற்சியாளர்

சான்றிதழ் பெற்ற வாழ்க்கைத் தொழில் மேம்பாட்டாளர் இவர், வேலையிட பயிற்றுவிப்பாளர், பத்து வருட மனிதவள பின்னணி அனுபவம் உள்ள வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்.
நேர்முகப் பேட்டிகள், சுயக்குறிப்பு பட்டியல் தயாரிப்பு, பராமரிப்பு, வேலையைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் போன்றவற்றை உள்ளடக்கிய வேலைக்கு தயாராக்கும் பயிலரங்குகளை ஏற்பாடு  செய்வதிலும் பயிற்சிகள் வழங்குவதிலும் அனுபவம் நிறைந்தவர். 
வாழ்க்கைத்தொழில் சோதனைகளைச் சார்ந்த வலுவான திறன் பட்டியலில் சான்றிதழ் பெற்ற பரிவர்த்தனைப் பகுப்பாய்வாளர். ஆலோசனைத் துறையிலும் இவர் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.
 

வேலை வாய்ப்பு தொடர்பில் ஏதாவது கேள்விகள் உள்ளனவா? 

வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டம் (PCP) போன்ற நடுத்தர வயதினருக்கு உதவும் திட்டங்களைப் பற்றி மேலும் அறிய ஆவலா?
'முரசிடம் கேளுங்கள்' என்ற இக்கேள்வி பதில் தொடருடன் எங்களோடு இணைக. உங்கள் ஐயங்களைத் தீர்க்க, கேள்விகள் சிலவற்றுக்கு சிங்கப்பூர் ஊழியரணி பதிலளிக்கும். 
கேள்விகளை tamilmurasu@sph.com.sg எனும் இணைய முகவரிக்கு அனுப்புங்கள். கூடிய விரைவில் பதில்களுடன் உங்களை சந்திக்கிறோம்!
அதுவரை, சிங்கப்பூர் ஊழியரணி திட்டங்களைப் பற்றி அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்.

https://bit.ly/3iKmS31

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon