மொழியும் மரபுடைமையும்

ஸ்ரீ திவ்யாபாரதி மோகன்

சிங்கப்பூரின் மரபுக்கும் இந்தி யரின் பாரம்பரியத்துக்கும் தமிழ் மொழி கற்றலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? இக்கேள்விக்கு செவ்வனே பதில் அளிக்கும் வண்ணம் 'பாரம்பரிய பயணம்' என்னும் நிகழ்ச்சி, 96 தொடக்கப்பள்ளி மாணவர்களைக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான சிற்பிகள் மன்றத்தின் பொதுச் செயலாளரும், ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினருமான திருமதி எஸ்.ஜானகி, 50, "ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய கருப் பொருளைக் கொண்டு புதிய முயற்சியில் இறங்குகிறோம்.

"இந்த ஆண்டு மொழியை இந்தியர் மரபு வழி மட்டுமல்லாமல், சிங்கப்பூரின் மரபு வழியும் கற் பிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு இந்திய மரபுடைமை நிலையம் மிக சிறந்த நிகழ்விடமாக இருந்தது," என்றும் "தமிழ் மொழியை ஓர் அன்றாட, வாழ்வியல் மொழியாக மாணவர்கள் கருதவும் பயன் படுத்தவும் வேண்டும் என்பதே நம் நோக்கம்," என்றும் கருத்து ரைத்தார். தொழில்நுட்ப உதவியோடு, புதுவித நடவடிக்கைகள் மூலம், மொழியைப் புதிய, சுவாரசியமான வகைகளில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று முக்கிய அங்கங்களாக இந்நிகழ்ச்சி பிரிக்கப்பட்டது.

இந்திய மரபுடைமை நிலையத்தில் இருந்த பழமையான பொக்கிஷத்தைக் கண்டு அதனைப் பற்றி விவாதிக்கும் மாணவர்கள். படம்: சிற்பிகள் மன்றம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!