சென்னை புத்தகக் கண்காட்சியில் கௌரவ நாடாக சிங்கப்பூர்

சென்னை­யில் தற்போது நடை­பெற்று வரும் புத்­த­கக் கண்­காட்­சி­யில் சிங்கப்­பூ­ருக்கு 'கௌரவ நாடு' என்ற சிறப்பு வழங்கப்­பட்­டுள்­ளது. 39வது ஆண்டாக நடை­பெ­றும் இந்திய புத்­த­கக் கண்­காட்­சி­களில் இந்தச் சிறப்பைப் பெறும் முதல் நாடு சிங்கப்­பூர். இம்­மா­தம் முதல் தேதி­யில் இ­ருந்து 13ஆம் தேதி வரை இந்தக் கண்­காட்­சியை தீவுத் திடலில் தென்­னிந்­திய புத்தக விற்­பனை­ யா­ளர், பதிப்­பா­ளர்­கள் சங்கம் ஏற்பாடு செய்­துள்­ளது.

இந்திய அளவில் இரண்டா­வது பெரிய வர்த்­தக ரீதி­யி­லான புத்­த­கக் கண்­காட்­சி­யான இதில் இந்திய எழுத்­தா­ளர்­கள் மட்­டு­மின்றி சிங்கப்­பூர் எழுத்­தா­ளர்­களும் எழுதிய புத்­த­கங்கள் அங்கு அறி­மு­கப்­ படுத்­தப்­படு­கின்றன. சிங்கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழகம், தேசியக் கலைகள் மன்றம் ஆகி­ய­வற்­றின் ஏற்­பாட்­டில் எட்டு சிங்கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர்­கள் தொடக்க நிகழ்ச்­சி­யில் கலந்­து ­கொள்­கின்ற­னர். மேலும், சிங்கப்­பூ­ருக்­கென தனியான கூடம் ஒன்றும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அதில் குழு விவாதங்கள், வாசிப்­பு­கள், சிங்கப்­பூர் நூலா­சி­ரி­யர்­களு­டன் சந்­திப்பு போன்ற நிகழ்ச்­சி­கள் தினமும் நடத்­தப்­படு­கின்றன. சிங்கப்­பூர் எழுத்­தா­ளர்­க­ளான திரு சித்­து­ராஜ் பொன்ராஜ், திரு ஜே. எம். சாலி ஆகி­யோ­ரது புத்­த­கங்கள் இந்தக் கண்­காட்­சி­யில் வெளியீடு காண்­கின்றன.

இந்தக் கண்­காட்­சி­யில் சிங்கப்­பூர் எழுத்­தா­ளர்கள் எழுதிய சுமார் 120 தமிழ்ப் புத்­த­கத் தலைப்­பு­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. திரு ராம கண்­ண­பி­ரான், திரு நா. கோவிந்த­சாமி, திரு பி. கிருஷ்­ணன், திரு ஜே.எம் சாலி, திரு க.து.மு. இக்பால், திரு மா இளங்கண்­ணன் போன்ற விருது பெற்ற எழுத்­தா­ளர்­களின் புத்­த­கங்களை அங்கு காணலாம். இந்தக் கண்­காட்­சி­யில் சிறு­ வ­ருக்­கான புத்­த­கங்கள், ஆங்­கி­லப் புத்­த­கங்களும் உள்ளன. சிங்கப்­பூர் எழுத்­தா­ளர்­களின் படைப்­பு­கள் இந்­தி­யா­வில் பெரிதும் வாசிக்­கப்­படு­வ­தா­கக் குறிப்­பிட்ட தேசியக் கலைகள் மன்றத்­தின் தற்­கா­லிக இயக்­கு­நர் திரு­வாட்டி மே டான், அவர்­கள் இந்திய எழுத்­தா­ளர்­களு­டன் வலுவான பிணைப்பை ஏற்­படுத்த இது­போன்ற நிகழ்­வு­கள் உதவும் என்றார்.

450 பதிப்­பா­ளர்­களின் புத்­த­கங்கள் 800 கடை­களில் காட்­சிக்­கும் விற்­பனைக்­கும் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தென்­னிந்­திய புத்தக விற்­பனை­யா­ளர், பதிப்­பா­ளர்­கள் சங்கப் பொரு­ளா­ளர் திரு ஒலி­வண்­ணன் கூறினார். சிங்கப்­பூர் தமிழ் நூல்­களைச் சென்னை புத்­த­கக் கண்­காட்­சி­யில் பார்ப்­ப­தற்கு மகிழ்ச்சி தெரி­வித்த தமி­ழ­கக் கவிஞர் ஞானக்­கூத்­தன், இந்த அறி­மு­கம் விரி­வா­க­ வேண்­டும் என்றார். சிங்கப்­பூர் இலக்­கி­யங்கள் தமி­ழகத்­தில் கிடைப்­ப­தற்­கான நிரந்தர ஏற்பாடு செய்­யப்­பட வேண்டும் என கண்காட்சி யில் கலந்துகொண்ட தமிழகக் கவிஞர் மனுஷ்­ய­புத்­தி­ரன் கருத்­ துரைத்­துள்ளார்.

இந்தியாவுக்கான சிங்கப்பூர் துணைத் தூதர் ராய் கோ கண்காட்சியில் அமைந்துள்ள சிங்கப்பூர் கூடத் தைத் திறந்துவைத்தார். உடன் சிங்கப்பூர், தமிழக எழுத்தாளர்கள். படம்: தேசியக் கலைகள் மன்றம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!