பில்லியனை எட்டிய மெசஞ்சர்

சமூக ஊடகச் செயலியான ஃபேஸ்புக் மெசஞ்சரை மாதத்தில் ஒருமுறை யேனும் பயன்படுத்தும் பயனர் களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மெசஞ்சரின் இந்த வளர்ச்சி சமூக ஊடகத்தைத் தாண்டி இன்னும் பல செயலிகளை உரு வாக்க ஊக்கமளிப்பதாக ஃபேஸ் புக் நிறுவனம் கூறியது.

சமூக ஊடகமான ஃபேஸ்புக் கின் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை 1.6 பில்லியனுக்கும் அதிகம். அதுபோல, அண்மையில் அந்த நிறுவனம் விலைக்கு வாங்கிய வாட்ஸ்அப் செயலியும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. "மக்களும் வர்த்தகங்களும் தங்களுக்குள் தொடர்புகொள்ள உதவுவதில் அதிக கவனம் செலுத் துகிறோம்," என்றார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் டேவிட் மார்க்கஸ்.

இன்ஸ்டகிராம், ஆக்கியுலஸ் போன்ற செயலிகளும் ஃபேஸ்புக் குடும்பத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் இன்ஸ்டகிராம் செய லியை 500 மில்லியனுக்கும் மேற் பட்டவர்கள் பயன்படுத்தி வருகின் றனர். ஆஸ்திரேலியா, பிரிட்டன், வட அமெரிக்கா, பிலிப்பீன்ஸ், தாய் லாந்து ஆகியவற்றுடன் இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் மெசஞ்சர் சேவைக்கு நல்ல வர வேற்பு இருப்பதாகக் குறிப்பிட்டார் திரு மார்க்கஸ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!