தேசிய கவிதை விழா: 3 நாட்கள், 4 மொழிகளில் நிகழ்ச்சிகள்

சிங்கப்­பூர் தேசிய கவிதை விழா வரும் வெள்­ளிக்­கிழமை முதல் ஞாயிற்­றுக்­கிழமை வரையில் நடைபெற உள்ளது. பல மொழி, பல தலை­முறைக் கவி­ஞர்­களை ஒன்­றிணைக்­கும் இந்த மூன்று நாள் விழாவில் கவிதை வாசிப்பு, கருத்­த­ரங்கம், போன்ற பல அங்கங்கள் தமிழ், ஆங்­கி­லம், சீனம், மலாய் மொழி­களில் இடம்­பெ­ற­வுள்­ளன. இரண்டா­வது ஆண்டாக நடை­பெ­றும் கவிதை விழாவின் தொடக்­க ­நி­கழ்ச்சி ஜூலை 29ஆம் தேதி வெள்­ளிக்­கிழமை தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தின் கேலரி தியேட்­ட­ரில் மாலை 6.00 முதல் இரவு 11 மணி வரை நான்கு மொழி கவிதை வாசிப்­பு­டன் தொடங்­கும்.

சனிக்­கிழமை காலை 11 மணியில் இருந்து இரவு 8.00 மணி வரையில் ஆங்கில, சீன நிகழ்­வு­கள் இடம்­பெ­றும். தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தில் நிகழ்ச்­சி­கள் நடை­பெ­று­கின்றன. சிறப்­புரை, பெண்கள் கவிதை குறித்த கருத்­த­ரங்கம், 'கவிதை வாசிப்­புக்கு தயா­ரா­தல்' பட்டறை, கவிதை வாசிப்பு போன்ற அங்கங்கள் ஆங்கில நிகழ்ச்­சி­யில் இடம்­பெ­றும். சிறு­வ­ருக்­கான கவிதை­கள் நிகழ்ச்சி பகல் 11.30 முதல் 1.00 மணி வரையில் சிங்கப்­பூர் பூமலை­யில் (பொட்­டா­னிக் கார்­டன்ஸ்) நடை­பெ­றும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!