தலைசிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் அதிபர் விருது

தனிப்பட்ட திறன்களால் மாணவர் களின் கற்றல் பயணத்தைச் சுவாரசியமாக்கும் திரு தர்மேந்திரா ஜெயராமன், திரு அனில் வாசுதேவன் ஆகிய இருவரும் தலை சிறந்த ஆசிரியர்களுக்கான அதிபர் விருதைப் பெற்றுள்ளனர். சிக்லாப் உயர்நிலைப் பள்ளிக் குத் தமது வாழ்க்கையில் 17 ஆண்டுகளை அர்ப்பணித்துள் ளவர் 43 வயதான திரு தர்மேந்திரா. அடங்காத மாணவ ரையும் பொறுப்பானவர்களாக்கு வது திரு தர்மேந்திராவிற்கு கை வந்த கலை. அவ்வாறு பல மாணவர்கள் இப்போது முழுநேர இசை, நடனப் பயிற்றுவிப்பாளர்களாகப் பொறுப்பு வகிப்பதைக் குறிப்பிட்ட திரு தர்மேந்திரா,

'ஹிப் ஹாப்', 'ஜாஸ்' போன்ற நடனங்களைப் பள்ளியில் கற்றுத் தருகிறார். பரதத்தின் மீதான ஆர்வத்தை 'பாஸ்கர்ஸ்' கலைக் கழகத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்ட அவர், 25 ஆண்டு காலமாக நாட்டியக் கலையிலும் ஈடுபட்டு வருகிறார். நடனக் கலையுடன் தொடர்புள்ளவற்றைப் பள்ளியில் கற்பிப்பது திருப்தியளிக்கிறது என்ற அவர், "எதேச்சையாக ஆசிரியர் பணிக்கு வந்த எனக்குக் கற்பித்தலில் ஆர்வம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்," என்றார்.

கலையுடன் சமூகக் கல்வி யையும் சொல்லிக் கொடுக்கும் திரு தர்மேந்திரா திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு சில பாடங் களைத் தெளிவுபடுத்துகிறார். படித்தது கட்டடப் பொறியியல். பணியாற்றுவது ஆசிரியராக. மார் சிலிங் உயர்நிலைப் பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 41 வயது திரு அனிலுக்குத் தலைசிறந்த ஆசிரிய ருக்கான அதிபர் விருதைப் பெரு வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

சிறந்த ஆசிரியர்களுக்கான அதிபர் விருதைப் பெற்ற ஆசிரியர்கள் தர்மேந்திரா ஜெயராமன், அனில் வாசுதேவன் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!