ஷேக்ஸ்பியரின் 400வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

முஹம்மது ஃபைரோஸ்

புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் மறைந்து 400வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘சிட்ஃபி’ எனும் சிங்கப்பூர் இந்திய நாடகக் கலை, திரைப்பட ஆர்வலர்கள் மன்றம் வரும் சனிக்கிழமை அன்று சிறப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளது. ‘எழுத்து முதல் மேடை வரை’ எனும் தலைப்பையொட்டி தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் ஷேக்ஸ்பியரின் பணிகள் பற்றி தெரிந்த நடிகர்கள், எழுத் தாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் தங்களது அனுபவங் களைப் பகிர்ந்துகொள்வர்.

ஷேக்ஸ்பியரின் ‘Othello’ படைப்பை இயக்கியது பற்றி திரு கணேஷ் காசி பேசுவார். ‘Titus Andronicus’ படைப்பு குறித்து தமிழ் மேடை நாடகத்துக்கு வசனம் எழுதிய டாக்டர் இள வழகன், அதுகுறித்த அனுபவங் களைப் பகிர்வார். இத்துடன், ‘Macbeth’, ‘Othello’ ஆகிய படைப்புகள் பற்றிய காணொளிகளும் நிகழ்ச்சியில் திரையிடப்படும்.

‘சிட்ஃபி’ மன்றத்தின் நிகழ்ச்சி ஒன்றில் உள்ளூர் கவிஞர் க.து.மு. இக்பால் (நடுவில்) பங்கேற்பாளர் களுடன் எழுத்துத் துறை சார்ந்த தனது அனுபவங் களைப் பகிர்ந்து கொள்கிறார். படம்: சலீம் ஹாடி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிலாண்டுரோனிக்ஸ் பேக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை