சிங்கப்பூரில் நாடகம் பற்றி கண்காட்சி

சுதாஸகி ராமன்

சிங்கப்பூரின் நாடகத் துறையின் வரலாற்றில் இடம்பெற்ற முக்கிய நாடகங்களைப் பற்றியும் அவற்றைத் தயாரித்த விதங்களைப் பற்றியும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இப்போது புதிய கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் ('Script & Stage: Theatre in Singapore From The 50s To The 80') தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழிகளின் நாடகத் துறைகள் கடந்த 1950களில் இருந்து 1980கள் வரை கண்டுள்ள வளர்ச்சியைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ளலாம். அவ்வகையில் இந்த நான்கு மொழிகளில் இயற்றப்பட்ட வெவ்வேறு பிரபலம் வாய்ந்த உள்ளூர் நாடகப் படைப்புகள் பற்றியும் அவற்றை இயற்றிய நாடக ஆசிரியர்கள் குறித்தும் இந்தக் கண்காட்சி பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்ட இந்தக் கண்காட்சி, தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் அமைந்திருக்கிறது. தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் நாடகத்துறையைப் பற்றிய ஆகப் பெரிய கண்காட்சியும் இதுவே

'Script & Stage' கண்காட்சி வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி வரை தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 7, 8வது மாடிகளில் நடைபெறும். மேல் விவரங்களுக்கு http://www.nlb.gov.sg/ exhibitions/ எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

'டாக்டர் சுந்தர்' நாடகத்தை எழுதிய சிங்கப்பூரின் மூத்த நாடகக் கலைஞர்களில் ஒருவரான திரு எஸ் வரதன் தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெறும் கண்காட்சியைப் பார்வையிடுகிறார். இந்தக் கண்காட்சியில் பல ஆண்டுகால நாடக எழுத்து வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. படம்: தேசிய நூலக வாரியம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!