பெரிய ‘ஹலால்’ சமையல் கழகம்

வில்சன் சைலஸ்

சமையலில் ஆர்வமுள்ள 54 வயது திருவாட்டி ஜமுனா, அண்மையில் அறிமுகமான 'எஸ்எஸ்ஏ' சமையற் கலைக் கழகத்தின் மூலம் கட்டுப் படியான கட்டணத்தில் கேக் செய்ய கற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது வகுப்புகளைத் தொடங்கிய இக்கழகம், இதுவரை திருமதி ஜமுனா போன்ற கிட்டத்தட்ட 1,000 பேருக்குப் பயிற்சிகள் அளித்திருப்ப துடன் 'பேக்கிங்' செய்ய விரும்பு வோரின் விருப்பம் நிறைவேறவும் உதவி வருகிறது. சுவையான கேக்குகள், பலகாரங் கள் செய்வதில் திறமை வாய்ந்த உள்ளூர் சமையல் நிபுணரான திருமதி சித்தி மஸ்துரா ஆல்வியைப் பிரதான சமையல் பயிற்றுவிப் பாளராகக் கொண்ட இக்கழகம், சுய மேம்பாடு, தொழில் முனைப்பு ஆகிய அம்சங்களையும் பயிற்சி யாளர்களுக்குப் போதிக்கிறது.

மீடியாகார்ப்பின் மலாய் வானொலி 'வர்ணா 94.2', உள்ளூர் மலாய் தொலைக்காட்சி 'சூர்யா' ஆகியவற்றில் சமையல் நிகழ்ச்சி களைப் படைக்கும் பிரபல சமையல் கலைஞரான சித்தி மஸ்துரா, ஊழியரணி மேம்பாட்டு வாரியம், மீடியாகார்ப் பதிப்பகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வாழ்நாள் கற்றல் விருதை முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனிடமிருந்து 2005ஆம் ஆண்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமக்குப் பயிற்சி அளித்த பிரபல சமையல் நிபுணர் திருமதி சித்தி மஸ்துராவுடன் திருவாட்டி ஜமுனா (இடது). படம்: 'எஸ்எஸ்ஏ' சமையல் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!