சிங்கப்பூர் எக்ஸ்போவில் மாம்பழத் திருவிழா

திமத்தி டேவிட்

சிங்கப்பூர் இந்திய திருவிழா இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு இரு முறையாக நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கவுள்ள விற்பனை விழாவில் இந்த ஆண்டு முதல் முறையாக மாம்பழத் திருவிழா இடம்பெற உள்ளது. இதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வகையான மாம்பழங்கள் வரவ ழைக்கப்பட உள்ளன. வெவ்வேறு சுவைகளைக் கொண்ட விதவித மான மாம்பழங்களைச் சுவைக்க 'லியோஸ் கிலான்ஸின் மேங்கோ வில்லேஜ்' பக்கம் வரலாம். அல்ஃபோன்சோ, கேசர், பாயரி, லால் பாக், பாடாமி, தோடாபுரி, நீலம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மாம்பழ வகைகளை கண்காட்சியில் வாங்கி ருசிக்க லாம்.

சிங்கப்பூர் எக்ஸ்போ 6B அரங்கில் களைகட்டவுள்ள சிங்கப்பூரின் மாபெரும் விற்பனை மற்றும் பிரம்மாண்ட பொழுது போக்குத் திருவிழா மே 1ஆம் தேதி வரை நடைபெறும். இந்த ஐந்து நாள் கண் காட்சியில் 160க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தப்லா! வார இதழ், தமிழ் முரசு நாளிதழ், டி ஐடியாஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தொடங்கி வைக்கப்பட உள்ள இந்த விற்பனை விழாவில் 10,000க்கும் மேற்பட்ட ஆடை அணிகலன்கள், அழகுச் சாதனங்கள், புத்தகங்கள், மண் பாண்டங்கள், கைவினைப் பொருட் கள், பொம்மைகள், பளிங்கு, வெண்கலச் சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையால் வடிவமைக் கப்பட்ட தேக்கு மரச்சாமான்கள், நறுமணப் பொருட்கள், ஆயுர்வேத, ஆரோக்கியப் பொருட்கள், தின் பண்டங்கள், உடனடி சமைய லுக்குத் தேவைப்படும் பொருட்கள் போன்றவை விற்கப்படவுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!