கபடி ஆட்டம் களைகட்டியது

ப. பாலசுப்பிரமணியம்

கபடியில் எந்த குழுதான் ‘கில்லி’ என்பதை நிர்ணயிக்க மொத்தம் 24 குழுக்கள் கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயிலுக்கு எதிரே இருக்கும் திடலில் களமிறங்கின. இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ சிவன் கோயிலும் மெக்பர்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து இப்போட்டிக்கு கடந்த 9ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தன. ஒவ்வொரு குழுவிலும் 10 விளை யாட்டாளர்கள் இடம்பெற வேகம், விவேகம், பலம் என பாரம்பரிய விளை யாட்டான கபடியில் விளையாட்டாளர் கள் தங்களது ஆற்றலை வெளிக் காட்டினர். கடும் போட்டிகளுக்குப் பிறகு மாபெரும் விளையாட்டாளர் கிண் ணத்துடன் $1,000 ரொக்கத்தை தட் டிச் சென்றது ‘குஜிலி பாயிஸ்’ குழு.

காலையில் தொடங்கி மாலை வரை நீடித்த இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு மதிய உணவும் கோயிலில் பரிமாறப்பட்டது. விளையாட்டுகளில் இந்தியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக் கத்துடன் இது இரண்டாவது ஆண் டாக நடந்தேறியது. இரண்டாம் ஆண்டு இதனை நிகழ்த்துவதில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகக் கூடி யுள்ளது என்றும் கபடி விளையாட்டைப் பற்றி அறிய ஆவலுடன் இருந்த மற்ற இனத்தவர்களும் இந்த விளையாட் டைப் பார்வையிட வந்தனர் என்றும் மெக்பர்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் திரு ந.முத்துகுமார் தெரிவித்தார்.