138 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி

செட்டியார்கள் கோயில் குழுமத் தின் ஏற்பாட்டில், அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் இம்மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற கல்வி உதவி நிதி வழங்கும் விழாவில் 138 மாணவர்கள் விரு தைப் பெற்றுக்கொண்டார்கள். சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாக்கோப் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பள்ளிப் பொருட்களை வாங்கவும் அடுத்த ஆண்டு நான் மேலும் சிறப்பாக தேர்ச்சி பெறவும் இந்த உபகாரச் சம்பளம் எனக்கு ஊக்கமளிக்கி றது," என்றார் ஸிங்ஹுவா தொடக் கப் பள்ளியில் ஐந்தாம் நிலையில் பயிலும் ஜெயஸ்ரீ.

"கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கும் கல்வி நிதி கொடுத்து உதவுவதே செட்டியார்கள் கோயில் குழுமத்தின் நோக்கம். பொருளாதார காரணங்களுக்காக எந்த ஒரு மாணவரும் கல்வியில் பின்தங்கி விடக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். "இந்த ஆண்டு கல்வி உதவி நிதி சுமார் $100,000 வரை அதிகரித்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இது தவிர எங்கள் குழுமம், சமூகத்தின் அனைத்துத் தரப்பி னரும் பயன்பெறும் வகையில் மெதுவோட்டம், இலவச மருத்துவ முகாம் ஆகிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது", என்று கூறினார் செட்டியார்கள் கோயில் குழுமத் தலைவர் திரு அரு. இராமசாமி செட்டியார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!