செம்பு தரும் தெம்பு

அறிவியலில் தாமிரம் என அழைக்கப்படும் செம்பு, நமது உடலுக்குக் கூடுதல் தெம்பைத் தரும். செம்புப் பாத்திரம்தான் வேண்டும் என்பதில்லை, ஒரு சிறிய செம்புத்துண்டு இருந்தாலே போதும். இப்போதெல்லாம் பிளாஸ்டிக் பயன்பாடு பெருகிவிட்டது. நீரைப் பிடித்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள், குடங்களில் ஒரு சிறிய செம்புத்துண்டைப் போட்டு வைத்தால் அந்த நீர் சத்து நிறைந்ததாக மாறிவிடும். வயிறு மெதுவாகச் சுருங்கி விரிவதை ஊக்குவிக்கும் அரிய குணத்தைச் செம்பு கொண்டுள்ளது. இதனால், ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை நாம் பெறலாம்.

இரத்த சோகையை எதிர்க்க போதிய அளவு இரத்தச் சிவப்பணுக்கள் தேவைப்படுகின்றன. அந்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செம்பு உதவுகிறது. கர்ப்பிணிகள் செம்புப் பாத்திரத்தில் பிடித்து வைக்கப் பட்டுள்ள நீரைக் குடித்தால் கிருமித்தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம். இதன்மூலம் கர்ப்பிணிகள் தங்களைப் பாதுகாப்பதோடு, வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாக்கலாம். செம்பில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் திட்டுகளையும் சிறப்பாகக் கையாண்டு, விரைவில் முதுமைத் தோற்றம் வராமல் தடுக்கின்றன. சருமத்திற்கும் முடிக்கும் போதிய இரத்த ஓட்டம் இருப்பதை செம்பு உறுதி செய்கிறது. 2019-02-04 06:01:00 +0800

Loading...
Load next