வாகன எண் பலகைகளில் 'இமோஜி' சின்னங்கள்; ஆஸ்திரேலியா அறிமுகம்

வாகன எண் பலகைகளில் 'இமோஜி' சின்னங்கள்; ஆஸ்திரேலியா அறிமுகம்

1 mins read
a738a24c-d254-4c2b-a9d0-49e21366b8bc
-

சமூக ஊடகங்கள் அல்லது குறுந்தகவல் சேவைகள் வாயிலாக உரையாடுபவர்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த பயன்படுத்தும் 'இமோஜி' சின்னங்கள் வாகன எண் பலகைகளிலும் இடம்பெறவுள்ளன.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் வாகன ஓட்டுநர்கள் இந்தச் சின்னங்களை வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தங்களது வாகன எண் பலகைகளில் சேர்க்கலாம்.

இதில் தற்போது ஐந்து சின்னங்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சின்னங்கள் அலங்காரத்திற்கு மட்டுமே என்றும் அதிகாரபூர்வ பத்திரங்களில் இவை இடம்பெறமாட்டா என்றும் கூறப்படுகிறது.

இமோஜி சின்னங்களுக்கான விலை 475 ஆஸ்திரேலிய டாலர் (459 வெள்ளி).