சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவையொட்டி இவ்வாண்டின் சிங்கப்பூர் மரபுடைமை விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது. சிங்கப்பூர் வரலாற்றில் உள்ள முக்கிய நிகழ்வுகளைக் கருப்பொரு ளாகக் கொண்டு நிகழ்ச்சிகள் படைக்கப்படும். இந்த ஆண்டின் சிங்கப்பூர் மரபுடைமை விழா நான்கு வாரயிறுதிகளில் நடைபெறும். கம்போங் கிளாம், பிடோக் ஆகிய வட்டாரங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சி களைப் பொதுமக்கள் கண்டு மகிழலாம். இந்த வட்டாரங்களைப் பற்றி இதுவரை அறிந்திராத பல விஷயங்களை இந்த நிகழ்ச்சிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தேசிய மரபுடைமைக் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் சிங்கப்பூர் மரபுடைமை விழாவில் மரபுடைமைப் பயணங்கள், சுற்று லாக்கள், பொது அழைப்பு தினங் கள், இதர நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் அரங்கேறும். இவற்றின் மூலம் நமது நாட்டின் வரலாறு, மரபுடைமை ஆகியவை பற்றி கற்றுக்கொள்ளலாம். மக்க ளுக்கு மக்களால் நடத்தப்படும் இந்த விழா, சமூகத்துக்குப் புதுவித அனுபவத்தைத் தர இலக்கு கொண்டுள்ளது. (இடது படம்) இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி. இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும்.  இம்மாதம் 30ஆம் தேதியன்று இந்திய மரபுடைமை நிலையத்தில் கலாசாரப் படைப்பு நடைபெறும். படங்கள்: சிங்கப்பூர் மரபுடைமை விழா

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 இறுதிப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற சிங்க்கப்பூர் சூர்யா. கோப்புப்படம்: விஜய் டிவி

22 Apr 2019

சூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர்.

18 Apr 2019

இசைச்சுவையுடன் நகைச்சுவை