சிரிக்கவைத்த நட்சத்திரப் பட்டாளம்

விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு?’ புகழ் நட்சத்திரங்கள் சுமார் 2,000 சிங்கப்பூர் ரசிகர் களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்  அனுபவமும் உரையாடும் வாய்ப்பும் சில ரசிகர்களுக்குக் கிடைத்தது. 

கடந்த மாதம் 14ஆம் தேதி ஜூரோங்கில் உள்ள ‘ஸெப்@பிக் பாக்ஸ்’ அரங்கில் நகைச்சுவை நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 

எண் 153 டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள ‘அப்போலோ செல்லப்பாஸ்’ கடைத்தொகுதியின் ஏற்பாட்டில் பல பங்காளித்துவ நிறுவனங்களின் கூட்டு ஆதர வுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆயிரக்கணக்கானோர் முன் னிலையில் பிரியங்கா தேஷ் பாண்டே, ‘தாடி’ பாலாஜி, ஈரோடு மகேஷ் ஆகியோர் நிகழ்ச்சியைத் துடிப்புடன் நெறிப்படுத்தினர். 

பல ஆண் நட்சத்திரங்களின் மத்தியில் மக்களின் மனங்கவர்ந்த நாயகியாக நிகழ்ச்சியில் வலம் வந்தார் அறந்தாங்கி நிஷா. 

நிகழ்ச்சிக்காக வந்திருந்த கலைஞர்கள் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ரசிகர்களின் உற்சாகத்தில் தொய்வில்லாமல் சிரிக்கவைத்தனர். 

“பள்ளி வீட்டுப்பாடங்கள், படிப்பு என வாழ்க்கை மிக வேக மாகவும் மனஉளைச்சலுடனும் சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்த நகைச்சுவை நிகழ்ச்சி அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது,” என்றார் உயர்நிலைப் பள்ளி மாணவர் முஹம்மது ஃபைசல். 

பலர் தங்களது குடும்பத்தின ரோடு வந்து நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.  “என் பாட்டி, பெற்றோர், சகோதரனுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிரித்து மகிழ்ந்தேன்,” என்றார் 29 வயது தாதி லட்சுமி வெங்கடேசன்.

“எங்கள் குடும்பத்தினர் விரும்பிப் பார்க்கும் தொலைக் காட்சி நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு?’. 

அந்தத் தொடரில் வருவோர் நேரில் வந்து சிரிக்க வைக்கப் போவதை அறிந்தவுடன் நுழைவுச் சீட்டுகளை வாங்கினோம்,” என் றார் அவர்.

ரசிகர்கள் தங்களது மன சஞ்சலங்களை ஒதுக்கி வைத்து விட்டு வயிறு குலுங்க வாய்விட்டு சிரிக்க வைத்தது விறுவிறுப்பான இந்த நிகழ்ச்சி.

2019-05-12 06:00:00 +0800

Loading...
Load next