சிங்டெல்லின் புதிய ‘ஊழியரில்லாக் கடை’

சிங்டெல் நிறுவனம், ஊழியரில்லாத கடை ஒன்றைத் திறந்துள்ளது. ‘அன்பொக்ஸ்ட்’ என்ற பெயருள்ள அந்தக் கடையில் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கவனிப்பதற்கு ஊழியர்கள் இருக்கமாட்டார்கள். மாறாக அங்கு மனித இயந்திரம் ஒன்று வாடிக்கையாளர்களுடன் உரையாடி அவர்களுக்குத் தேவைப்படுவதைப் பரிந்துரைக்கும். கைத்தொலைப்பேசி கட்டணங்களைச் செலுத்துதல், முன்கட்டண (prepaid) அட்டைகளில் பணம் நிரப்புதல், மாற்று சிம் அட்டைகளைப் பெறுதல் உள்ளிட்டவற்றையும் வாடிக்கையாளர்கள் இந்தக் கடையில் செய்யலாம்.

20 பிக்கரிங் ஸ்திரீட்டில் உள்ள இந்தக் கடை, நகர்த்தக் கூடியதாக உள்ளது. சில மாதங்களுக்கு ஓர் இடத்தில் இருந்த பின்னர் அந்தக் கடை மற்றோர் இடத்திற்கு நகரும்.

‘அன்பொக்ஸ்ட்’ கடை இன்றைய வாடிக்கையாளரின் தேவையை நிறைவு செய்வதாகவும் சில்லறைத் துறையின் எதிர்காலத்தை இப்போதே காட்டுவதாகவும் சிங்டெல்லின் சிங்கப்பூர் பயனீட்டாளர் பிரிவைச் சேர்ந்த யுவேன் குவான் மூன் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுடன் உரையாடி அவர்களுக்குச் சேவை செய்ய மனிதர்கள் தேவைப்படாத காலம் நெருங்கிக்கொண்டிருப்பதை இது போன்ற கடைகள் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!